14-velicha-azhaipukal

$6

மொத்தம் முப்பது கவிதைகள், கவிதையின் அத்தனை வடிவங்களையும் கொஞ்சமேனும் தொட்டுவிடவேண்டும் என்னும் கவிஞரின் வேகம் இத்தொகுப்பில் புரிகிறது. கிராமியக் கவிதை, நகர்ப்புறக் கவிதை, இசைக் கவிதை, ஆராய்ச்சிக் கவிதை, தனி நபர்க் கவிதை, நிகழ்ச்சிக் கவிதை போன்ற விதவிதமான கவிதைகள். கரிசல்காட்டு கடுதாசியில் தொலைதூரத்துக் கிராமங்களை நம் கண் முன் விரிய வைக்கிறார்; தாயின் வாஞ்சையை, சகோதரனின் பிரிவை மென்மையாய்ச் சொல்லி மனதை அதிரவைக்கிறார். நியூயார்க் கட்டடங்களைத் தீண்டிய தீவிரவாதத்தையும், குஜராத் மக்களின் மன அமைதி திருடிய வன்முறையையும் பதிவு செய்து சமகால நிகழ்வுகளை நாளைய வரலாறாக்கும் முக்கியப் பணியை இந்நூல் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைச் சமூக நோக்குடன் வடித்த புதுமையான கவிதைகள் இந்நூலில் உள்ளன. இசை லயத்துடன் கூடிய நடை இயல்பாக அமைந்திருக்கிறது. புதுக்கவிதையின் பொருளடர்த்தியோடும் சொற்செட்டுகளோடும் மனதில் சுருக்கெனத் தைக்கும்படி சொல்லும் ஆற்றலுள்ள கவிதைகளில் எதுவும் அவலச்சுவையோடு முடியவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி. கவிஞரின் நகைச்சுவை நடை கவிதை உடையோடு அவைக்கு வந்து நடனம் ஆடுவது இன்னும் சிறப்பு

Quantity

SKU: 473ca5ba9fb2.

Product Description

There are totally thirty poems. The anthology indicates the anxiety of the poet to bring out poetry in all the genres to the extent possible. Folk songs, urban poetry, musical poems, research poems, individual poetry, event poems and so on. In the poem “KARISALKATTUK KADUTHASI” the poet brings out the picture of the distant villages before our eyes. Mother’s love and brother’s parting are subtly brought out that shocks us. This anthology has brought out the contemporary happenings of terrorism that set fire to New York buildings and the violence that marred the peace of Gujarat that will be a historical guidance for the future. There are innovative poems in this anthology designed on the various dimensions of the day to day living from a social perspective. There is a natural style set to music It is a matter of satisfaction that with the intensity of the new genre content and nice set of words that strike the readers mind instantly, there is nothing that has a tragic end. It is significant that the humorous style of the poet dances in the stage! (மொத்தம் முப்பது கவிதைகள், கவிதையின் அத்தனை வடிவங்களையும் கொஞ்சமேனும் தொட்டுவிடவேண்டும் என்னும் கவிஞரின் வேகம் இத்தொகுப்பில் புரிகிறது. கிராமியக் கவிதை, நகர்ப்புறக் கவிதை, இசைக் கவிதை, ஆராய்ச்சிக் கவிதை, தனி நபர்க் கவிதை, நிகழ்ச்சிக் கவிதை போன்ற விதவிதமான கவிதைகள். கரிசல்காட்டு கடுதாசியில் தொலைதூரத்துக் கிராமங்களை நம் கண் முன் விரிய வைக்கிறார்; தாயின் வாஞ்சையை, சகோதரனின் பிரிவை மென்மையாய்ச் சொல்லி மனதை அதிரவைக்கிறார். நியூயார்க் கட்டடங்களைத் தீண்டிய தீவிரவாதத்தையும், குஜராத் மக்களின் மன அமைதி திருடிய வன்முறையையும் பதிவு செய்து சமகால நிகழ்வுகளை நாளைய வரலாறாக்கும் முக்கியப் பணியை இந்நூல் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைச் சமூக நோக்குடன் வடித்த புதுமையான கவிதைகள் இந்நூலில் உள்ளன. இசை லயத்துடன் கூடிய நடை இயல்பாக அமைந்திருக்கிறது. புதுக்கவிதையின் பொருளடர்த்தியோடும் சொற்செட்டுகளோடும் மனதில் சுருக்கெனத் தைக்கும்படி சொல்லும் ஆற்றலுள்ள கவிதைகளில் எதுவும் அவலச்சுவையோடு முடியவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி. கவிஞரின் நகைச்சுவை நடை கவிதை உடையோடு அவைக்கு வந்து நடனம் ஆடுவது இன்னும் சிறப்பு)

Additional Information

ebookauthor

புகாரி