Product Description
This is the writer’s 2nd short story collection. The short stories make readers to see life ‘s incidents in completely different perspective. These stories tend to light a spark in the minds of readers and inadvertently we start to think from a different perspective. In one story there is Maria, who is confused whether to be happy or sad about her pregnancy and as a reader you tend to melt with her feelings. In the other story, readers become fans of Rohini, who craves to watch the beautiful dew drops falling . “Aadipattam” Selvi, “Naanenbhadhai marandhu…” Parimala, “Maatru” Aanandhi are like our neighbours who often loom in our memories. The beauty of this book, which makes it stand apart from others, is that it describes delicate feelings of women in a beautiful kaleidoscopic colours. (ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. வாழ்க்கையை, சம்பவங்களை முற்றிலும் வெவ்வேறான கண்ணோட்டங்களில் காணும் இச்சிறுகதைகள் வாசகர்களுக்கு வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. படித்துவிட்டு மறந்துவிடும் படைப்புகளாய் இல்லாமல் ஊன்றிச் சிந்திக்க வைக்கும் வார்ப்புகளாய் அமைந்திருக்கும் சிறுகதைகள் ஒரு சிறு பொறியையேனும் மனதினுள் கிளப்பத் தவறுவதில்லை. கருவுற்றிருப்பதற்காய் மகிழ்வதா துக்கிப்பதா என்று மறுகும் மரியா நெகிழவைக்கிறாரென்றால், பனி விழும் அழகைக் காண ஏங்கிக் காத்திருக்கும் ரோகிணி ரசிக்க வைக்கிறார். “ஆடிப்பட்டம்” செல்வியும், “நானென்பதை மறந்து…” பரிமளாவும், “மாற்று” ஆனந்தியும் நமது பக்கத்துவீட்டுக்காரர்கள் போல நினைவில் அடிக்கடி நிழலாடுகிறார்கள். பெரும்பாலும் பெண்களின் மெல்லிய உணர்வுகளே, கலைடாஸ்கோப் வண்ணக் கோலங்களாய் இந்த நூலை நிறைத்திருக்கும் அழகு இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.)