Product Description
To Canadian Poet Buhari, everything in life, from nature, humanity, the surprise of a child, or agitation on witnessing a crime scene can form the background of poetry. His rural poems have pleasant themes as their basis. Deep ideas fill his lines effortlessly. In this book, he talks of “The night I got a form as a soul was not my first night”. Describing the house, he says, “It is not the walls nor the room, it is the unity of the inhabitants that makes it a sweet home”. In a lullaby song, he reveals the very truth of life by his words “The one who comes and the one who goes are in the same chain as the one who stays.” He describes his daughter as The Green Chilly Princess – “Pachchai Milagaai Ilavarasi”. Green refers to her freshness and tenderness, Chilly refers to the volatile anger of his beautiful daughter that would come and disappear as swiftly. As soon as the Author comes from the office in the evening, his daughter runs to him, and he hugs and feels heaven in the divine embrace of his little angel. When he defines the anger of his daughter, he describes it as “The pungent taste on the tip of the tongue.” This book is full of similies and can be defined as a pinnacle of poetry, that is very hard to erase from the hearts of his readers. (கனடா கவிஞர் புகாரியின் பார்வையில் மனித நேயம், இயற்கை ரசனை, கொடுமைகளைக் கண்டு கொதிக்கும் இதயம், ஒரு குழந்தையின் வியப்பு, இப்படி எல்லாமே கவிதையாய்க் கிடைக்கின்றன இந்த நூலில். இவருடைய நாட்டுப்புறப் பாடல்கள் நயத்துடன் அமைந்திருக்கின்றன. கவிதைகள் முழுக்க தத்துவங்கள் இயல்பாகப் பொதிந்திருக்கின்றன – வேண்டுமென்று திணிக்கப்படாமல். ஓர் இடத்தில் “நான் கருவான முதல் இரவு – என் முதலிரவு இல்லையாம்” என்கிறார். வீட்டை வர்ணிக்கும்போது “சுவர்களல்ல, அறைகளல்ல – வசிப்போரின் கூட்டுயிரே வீடு” என்று சொல்கிறார். பிறிதொரு இடத்தில், ஒரு தாலாட்டுப் பாடலில் “வருவோரும் போவோரும், கண்ணே – இருப்போரின் தொடர்தானே” என்ற உண்மையை சர்வ சாதாரணமாக உதிர்த்துவிட்டுப் போகிறார்.”பச்சை மிளகாய் இளவரசி” எனத் தன்னுடைய மகளைப் பற்றி எழுதுகிறார். பச்சை என்றால் அழகும், இளமையும் பசுமையும். மிளகாய் உறைப்பு போல சுரீர் என்று அவளுக்கு வரும் கோபம் பிறகு மறைந்து விடுகிறது. மாலை நேரம் இவர் அலுவலகத்தில் இருந்து களைத்து விழுந்து திரும்பும்போது குழந்தை ஓடி வருகிறாள். அவளை அணைத்து மடியில் இருத்துகிறார். மாலை கவிழ்ந்தால் தளிர் மடியில் என் மனதின் கிழிசல் தைக்கின்றேன் என்கிறார். மகளுடைய சுரீர் கோபத்தைச் சொல்லும்போது “நாக்கின் நுனியோரம் பொன் ஊசி உறைப்பு” என்கிறார். இது கவித்துவத்தின் உச்சம். மயக்க வைக்கும் உவமைகளும், மனதை அசைக்கும் படிமங்களுமாக நெஞ்சிலே நிற்கின்றன இந்நூலின் கவிதைகள்.)