Product Description
‘Relationship – is it a burden or pleasure’- finding an answer to this question is sharply focused in the anthology of short stories by Sakthidasan. In each of the stories answer sought to be found is the question, “In the chess board of time, do the relationships polish themselves fine or caught up in the whirlwind and suffer?” The author leaves it to the readers to find an answer is clear. These short stories introduce thrill, lose not the impact of imagination and natural dialogues caresses our hearts. As these stories relate to the nonresident Tamils abroad, we are able to see new interests are ingrained in the human relationships. That the author has not tried to justify the man-woman relationship and its impact on the mind, nor indulges in criticism, it is certain to make the reader absorb line by line in his heart and enjoy. (உறவுகள் சுமையா, சுகமா எனும் ஒற்றை வினாவுக்குப் பதில் தேடும் உன்னிப்பான முனைப்பை சக்திதாசனின் இத்தொகுப்பின் சிறுகதைகளில் காணலாம். காலத்தின் உருட்டு விளையாட்டில் உறவுகள் தம்மைத்தாமே மெருகேற்றிக் கொள்கின்றனவா அல்லது இடிபாடுகளில் சிக்கி உருக்குலைந்து வருகின்றனவா என்ற கேள்வி ஒவ்வொரு சிறுகதைகளுக்குள்ளும் ஒளிந்து விடையாடுகிறது. அதற்கான தீர்வுகளை வாசிப்பவர்களே யோசிக்கட்டும் என சக்திதாசன் நம்பியிருப்பதும் வெளிப்படை. பரப்புரைகளைப் புகுத்தி, புனைவுகளின் தாக்கத்தைத் தளரவிடாமல், இயல்பான சொல்லாடலால் நமது இதயங்களை வருடுகின்றன இச்சிறுகதைகள். புலம்பெயர்ந்த தமிழரின் அயல் நாட்டு வாழ்க்கை என்னும் புதிய களத்தில் சொல்லப்பட்டிருப்பதால், மனித உறவுகள் குறித்த இப்படைப்புகளிலும், புதிய சுவாரசியங்கள் பொதிந்து கிடப்பதை அறியமுடிகிறது. ஆண், பெண் சார்ந்த உறவுகள், மனக்கிலேசங்களை நடுநிலையில் நின்று நியாயப்படுத்தாமலும், இடித்துரைக்காமலும் காட்சிகளை மட்டும் கண்முன்னே கொணர்ந்து நிறுத்தியிருக்கும் சக்திதாசனின் சிறுகதைகள் வாசிப்பவர்கள் நெஞ்சுக்குள் வரி வரியாய் இறங்கி வசிக்கத் தொடங்கும் என்பது திண்ணம்.)