இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங்கும்.
ஆனால் உப்பைக் கடலுக்கு எடுத்துச் செல்லும் நதி நீரோ, ஆற்று நிரோ உப்புச் சுவையுடன் இருப்பதில்லை; ஏனெனில், இந்நீரிலுள்ள உப்பின் அளவு மிக மிகக் குறைவானதே ஆகும்.
நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு ஈரப்பசையையும் ஊட்டச்சத்தையும் மண்தான் அளிக்கிறது. மேலும் அவ்வப்போது நிகழும் வெப்பநிலை மாற்றங்களிலிருந்து வேர்களைக் காப்பாற்றுவதும் மண்தான்.
கூர்மையான உலோகத் தகடுகளின் அழுத்தத்தால் பனிக்கட்டி உருகி நீராகிறது; இந்த நீர் ஓர் உயவுப்பொருளாகப் (lubricant) பயன்பட்டு எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது.