இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில், தாங்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு கனிந்து வரும். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
சென்னிமலை சென்று முருகனுக்கு உகந்த தேனையும், தினை மாவையும் நிவேதனமாக அளிக்கவும். தாங்கள் விரும்பியவாறு மழலைச் செல்வம் கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
சமயபுரம் மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாவிளக்கு மாவில் நெய் தீபம் ஏற்றி 16 வாரம் தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வர, திருமணம் ஆகஸ்ட் 2011 வாக்கில் கை கூடும்.