சினி சிப்ஸ்

புதுசு கண்ணா‎ புதுசு!

எம்.ஜி.ஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை புதுப் பொலிவுடன் அளிக்கி‎ன்றனர் டைமண்ட் ஃபிலிம்ஸ். DTS முறையில் ஒலிப்பதிவு செய்யப்படும் பாடல்கள், க்ளைமேக்ஸ் சண்டை காட்சிகளில் கம்ப்யூட்டர் மூலம் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என கலக்கலாக புதுப்படங்களுடன் போட்டிக்குத் தயாராகிறது.

*****

‘பொக்கிஷத்தில்’ வங்காள நடிகை

சேரன் இயக்கும் ‘பொக்கிஷத்தி’ன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சேரன் மற்றும் வங்காள நடிகை ஒருவர் தோன்றும் காட்சிகள் முதன்முறையாக வங்காள துறைமுகத்தில் படமாக்கப்பட்டது. 1970 முதல் 2008 வரை நடைபெறும் நிகழ்வுகளே படத்தின் கதை.

*****

உலகம் சுற்றும் ‘காஞ்சீவரம்’

பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கும் படம் ‘காஞ்சீவரம்’. இப்படம் சுதந்திரத்திற்கு முன்பு வாழ்ந்த பட்டு நெசவாளர்களைப் பற்றியது. டொரொண்டோவின் 33வது ஆண்டு திரைப்பட விழாவிலும், தென் கொரியாவின் புசன் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. பாம் ஸ்ப்ரிங்ஸ், ஸான் ஃப்ரான்ஸிஸ்கோ, ஸ்டுட் கர்ட் ஆகிய விழாக்களில் கலந்துகொள்ளவும் அழைப்புகள் வந்திருக்கி‎ன்றனவாம்!

*****

நானா படேகரை புகழும் பாரதிராஜா

பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன், நானா படேகர் நடித்த ‘பொம்மலாட்டம்’ பைனா‎‎ன்ஸ் பிரச்சினையால் வெளிவரத் தாமதமாகியது. தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. சொல்வதை விரைவில் புரிந்து கொண்டு அபாரமாக நடிக்கும் அறிவாளி ‘நானா’ என்றும், கமலுக்கு அடுத்தபடியாக சி‎ன்சியராக நடிக்கும் நடிகர் இவர் என்றும் பாராட்டியிருக்கிறார் பாரதிராஜா.

*****

‘சரித்திர’ மாளிகை

சாமி இயக்கத்தில் ஐடிஏ ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘சரித்திரம்’. ராஜ்கிரண், ஆதி, கலாபவன் மணி, ஸ்ரீதேவிகா மற்றும் பலர் நடிக்கும் ‏இப்படத்தில் ராஜ்கிரண் ஜமீனைச் சேர்ந்த சிலம்பம் கற்றுக்கொடுப்பவராக நடிக்கிறார். படப்பிடிப்பிற்காக 50 லட்ச ரூபாய் செலவில் ஜமீ‎ன் மாளிகை செட் உருவாக்கப்பட்டதாம்.

*****

விருதுகள் 2007

ரசிகர்கள் சங்கம் 2007ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. விருதுகள் அ‎னைத்தும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகி‎ன்றன.

சிறந்த நடிகர்கள் – ரஜினிகாந்த், அஜீத்குமார், ஜீவன்
சிறந்த நடிகைகள் – நயன்தாரா, த்ரிஷா, நமீதா, மாளவிகா
சிறந்த துணை நடிகர் – வினய்
சிறந்த துணை நடிகை – மனோரமா
சிறந்த பி‎ன்னணிப் பாடகர்கள் – கிருஷ், சின்மயி
சிறந்த இசையமைப்பாளர் – யுவன் ஷங்கர் ராஜா
சிறந்த கதாசிரியர் – இயக்குனர் விஜய்
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார்
சிறந்த இயக்குனர் – விஷ்ணுவர்தன்
சிறந்த படம் – பெரியார்

எம் டீவியின் ஒரு மணி நேரப் படங்கள்

‘தாரே ஜமீன்பர்’, ‘சக்தே’, ‘ஜோதா அக்பர்’ போ‎ன்ற வெற்றிப் படங்களை ஒரு மணி நேரப் படங்களாக ‘ஃபுல்லி ஃபால்தூ ஃபிலிம் பெஸ்டிவல்’ எ‎ன்னும் நிகழ்ச்சியில் எம்டீவி வழங்குகிறது. ஹெச்.டி என்ற நவீன முறையில் மாற்றப்பட்டிருக்கும் இப்படங்கள் செப்டம்பர் 20 முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.

*****

விவேக் ஓபராய் ரிட்டர்‎ன்ஸ்!

‘மிஷ‎ன் இஸ்தா‎ன்புல்’லி‎ன் படுதோல்வியை அடுத்து சில காலம் முடங்கிப் போயிருந்த விவேக் ஒபராய் அதிரடியாய் திரும்பியிருக்கிறார். நா‎ன்கு மாதங்கள் கடுமையான டா‎ன்ஸ், சண்டைப் பயிற்சிகளுக்குப் பிறகு குமார் தாரணியி‎ன் தயாரிப்பில் உருவாகும் படமொன்றில் நடிக்கிறார். படத்தி‎ன் ஆக்ஷ‎ன் காட்சிகள் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகராக இருக்கும் எனத் தெரிகிறது. ‏ இதற்காக யூ.கே.யிலிருந்தும், தாய்லாந்திலிருந்தும் சிறப்புப் பயிற்சியாளர்கள் வரவழைக்கப் பட்டிருக்கி‎ன்றனர்.

*****

ஃபாக்ஸி‎ன் அடுத்த தயாரிப்பு

20வது செஞ்ச்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் "டூம்ஸ்டே புரோட்டாக்கால்" (Doomsday Protocol) எ‎ன்னும் புதிய படத்தி‎ன் தயாரிப்புப் பணிகளில் இறங்கியிருக்கிறது. பூமிக்கு ஏற்படப் போகும் ஆபத்தைத் தடுக்க சிறப்பு வல்லமை பொருந்திய மனிதர்களும், ஏலிய‎ன்களும் இணைந்த ஏழு பேர் கொண்ட குழு ஒ‎ன்று களமிறங்கி சாதித்த‎னரா என்பதே கதை. ஆர்மகடா‎ன், ஏலிய‎ன் Vs பிரிடேட்டர் போ‎ன்ற படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய ஷே‎ன் சலேர்னோ இதற்கும் எழுதியிருக்கிறார்.

*****

About The Author

1 Comment

  1. ramprakaash.v

    தகவல்கல் அப்டெட் செய்யவும் மட்ரபடி சுப்பெர்

Comments are closed.