பயற்றம்பருப்பு பிட்டு

தேவையான பொருட்கள்:

பயற்றம் பருப்பு – 1 கோப்பை,
பச்சை மிளகாய் – 4,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ½ கோப்பை,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – சுவைக்கு,
எலுமிச்சம்பழம் – 1,
தேங்காய்த் துருவல் – ஒரு மேசைக்கரண்டி,
கொத்துமல்லித்தழை (நறுக்கியது) – சிறிது.

செய்முறை:

முதலில், பயற்றம்பருப்பைக் கழுவி ஊற வைத்து, உப்பு சேர்த்து ரவை போல அரைத்துக் கொள்ளுங்கள். மாவை இட்லியாக ஊற்றி வேக வைத்துக் கொண்டு பத்து நிமிடங்கள் கழித்து உதிர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை விட்டுச் சூடுபடுத்தி, பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகளை வதக்கிக் கொண்டு நறுக்கிய பச்சை மிளகாய்த் துண்டுகளையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அத்துடன், உதிர்த்த பிட்டையும் சேர்த்து நன்றாகக் கலந்து எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து, துருவிய தேங்காயையும் நறுக்கிய கொத்துமல்லித் தழையையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்குங்கள்! சுவையான பயற்றம்பருப்புப் பிட்டு தயார்!

இதுவே இனிப்பாகத் தேவையானால், ஊறவைத்த பயற்றம்பருப்புடன் தேவையான அளவு வெல்லத்தைச் சேர்த்து அரைத்துக் கொண்டு, அதை இட்லியாக வார்த்த பின், வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரித் துண்டுகளை வறுத்துக் கொள்ளுங்கள்! பிறகு, இட்லியை அதில் பிட்டாக உதிர்த்துப் போட்டுத் தேங்காய்த் துருவலைத் தூவி நன்றாகக் கிளறி இறக்கினால் இனிப்புப் பயற்றம்பருப்புப் பிட்டு தயார்! சுவைத்து மகிழுங்கள்! மறவாமல் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author