வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறதோ எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காதே. எல்லாமே நீ ஆசைப்பட்டதுதான். நல்லது, கெட்டது, கொடுக்கல் வாங்கல் எல்லாமே ஏற்கனவே போட்ட விதை. இப்பொழுது அறுவடை பண்ண வந்திருக்கிறாய். நீ நெல் போட்டு இருந்தால் நெல் வரும். கரும்பு போட்டு இருந்தால் கரும்பு வரும். கொள்ளு போட்டிருந்தால் கொள்ளு வரும். ஏன் கொள்ளு வருகிறது என்று நீ கேட்கக் கூடாது. You will get whatever you have sowed. You undergo all your experiences effortlessly.
ஒரு drama பார்க்கிற மாதிரி பார். அதில் யாராவது அழுதால் நீயும் அழுவியா? (நீங்கள் எல்லாம் அழுவீர்கள்) It is a character. Enjoy பண்ண வந்திருக்கிறாய். Enjoy பண்ண வேண்டும். அதை விட்டு விட்டு நீயும் சேர்ந்து அழக் கூடாது. சினிமா screenலே வீடு பற்றி எரிகிறதா? பக்கெட்டில் மண்ணை எடுத்துக் கொண்டு ஓடக் கூடாது. எவ்வளவு தத்ரூபமாக எடுத்திருக்கிறார் என்று enjoy பண்ணு. அப்படி உன்னைச் சுற்றி நடக்கிற எல்லாவற்றையும் நீ சாட்சியாக இருந்து பார். அது உன் வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும். அது ஒரு drama. அதில் ஒரு given scene நடந்து கொண்டிருக்கிறது. காதல் காட்சி வரலாம், Court scene வரலாம், காமெடி வரலாம். எது வேண்டுமானாலும் வரலாம். ஒரு சினிமா என்றால் அது எல்லாம் இல்லாமலா இருக்கும்? சுகமும் வரலாம். சோகமும் வரலாம். நீ எதை பார்த்தும் மிரண்டு போய் விடக் கூடாது. கடவுளின் நாடகத்தில் அது எல்லாம் scene by scene வருகிறது. அந்த மாதிரி பார்க்க ஆரம்பித்தால் இந்த உலகம் உன்னை பாதிக்காது. Screenலே நெருப்பு வந்த உடனே பக்கெட் தூக்கிக் கொண்டு ஓடுகிற மாதிரி உன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம் வந்த உடன் என்னால் முடியும் முடியாது என்று அழுதாயானால், you cannot enjoy life. வாழ்க்கை என்பது பலவிதமான அனுபவங்களைத் தரும்.
நீ இந்த உலகம் என்கிற பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கிறாய். இதில் உனக்கு விதவிதமான lessons daily வருகிறது. நன்றாகப் படி. Be a good student. That is all. You undergo all the experiences. Tough lessons இருக்கும். Easy lessons இருக்கும். All the lessons you must learn well.
“