9. சாப்பிடும்பொழுது பேசியில் உரையாடக்கூடாது!
சாப்பிடும்பொழுது நம்மில் பலர் பேசியில் பேசிக்கொண்டே சாப்பிடுகிறோம். இது ஜீரணத்தை மிகவும் கெடுக்கும் ஒரு கெட்ட பழக்கமாகும். ஏனென்றால், நாம் எந்த விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறோமோ அந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே நமது மனம் முழுவதும் யோசித்துக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் நமது உடலில் ஜீரணச் சுரப்பிகள் எதுவுமே சுரக்காது. அப்பொழுது நாம் சாப்பிடும் சாப்பாடு கழிவாகவோ விஷமாகவோ மாறுகிறது. இரத்தமாகவும், தாது உப்புகளாகவும் மாறுவது கிடையாது.
சாப்பிடும்பொழுது பேசியில் உரையாடிக்கொண்டு சாப்பிடும் அனைவருக்கும் பல நோய்கள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு எந்த மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டாலும் குணப்படுத்த முடியாது. எனவே, சாப்பிடும்பொழுது தயவு செய்து பேசியைத் தவிருங்கள்! சைலன்ட்டில் வைத்து விட்டோ அணைத்து விட்டோ சாப்பிடுங்கள். இதனால் உணவு நன்றாக ஜீரணமாகிப் பல நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக மாறுகிறது.
10. சாப்பிடும்பொழுது கவனம் சிதறும் எந்த வேலையையும் செய்யக்கூடாது!
சாப்பிடும்பொழுது நமது கவனம், எண்ணம், மனம் உணவில் மட்டுமே இருக்க வேண்டும்! இதைத் தவிர வேறு எந்த விஷயத்திற்கும் செல்லாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, பேசுவது, பேசியில் உரையாடுவது, மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பது, வியாபாரத்தைப் பற்றி யோசிப்பது போன்ற செயல்கள் நமது எண்ணத்தை உணவிலிருந்து திசை திருப்பி விடும். இப்படி கவனம் சிதறும் எந்த விஷயத்தையும் நாம் சாப்பிடும்பொழுது செய்யக்கூடாது!
11. எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது?
எல்லா வைத்தியர்களும் எது நல்ல உணவு, எது கெட்ட உணவு என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். இந்த நோய்க்கு இது சாப்பிடக் கூடாது, அந்த நோய்க்கு அதைச் சாப்பிடக் கூடாதென்று பலரும் பலவிதமாகக் கூறுவார்கள். ஆனால், நமது சிகிச்சையில் அப்படிக் கிடையாது. நாம் சாதாரணமாகச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் சாப்பிடலாம்.
இனிப்புச் சாப்பிடாதீர்கள் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள்; இனிப்பை ஓரமாக வைத்து விடுங்கள். உப்புச் சேர்த்துக் கொண்டால் இரத்த அழுத்தம் அதிகமாகும் என்று கூறுகிறார்கள்; உப்பை ஓரமாக வைத்து விடுங்கள். புளி சேர்த்துக் கொண்டால் மூட்டு, முழங்கால் வலிக்குமென்கிறார்கள்; இனி புளியைச் சாப்பிடாதீர்கள். பூமிக்குக் கீழ் விளையும் பொருட்களைச் சாப்பிட வேண்டாமென்று கூறுகிறார்கள்; அதையும் ஓரமாக வையுங்கள். கத்தரிக்காய் சாப்பிட்டால் தோலில் நோய் வரும் என்கிறார்கள்; கத்தரிக்காயை ஒதுக்குங்கள். தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வரும் என்று கூறுகிறார்கள். எனவே, நாம் தக்காளியையும் ஒதுக்கி விடலாம்; எண்ணெய்ப் பலகாரம், தேங்காய் சாப்பிட்டால் கொழுப்புக் கட்டிகள் வருமென்று கூறுகிறார்கள்; எனவே, நாம் அவற்றையும் சாப்பிட வேண்டாம்! ஊறுகாய் சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள்; ஆகவே, அதுவும் தேவையில்லை. காரம் அதிகரித்தால் உடலில் நோய் வரும் என்கிறார்கள்; எனவே, நாம் காரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்! கசப்பு, துவர்ப்பான பொருட்களை ஏற்கெனவே நாம் யாரும் சேர்த்துக் கொள்வது கிடையாது. சமைத்த உணவு சாப்பிடும்பொழுது பழங்கள் சேர்த்துக் கொள்ளக்கூடாதென்று கூறுகிறார்கள்; எனவே, நாம் பழங்களையும் தொட வேண்டாம்!
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் கூறிச் சாப்பிடக் கூடாதென்று கூறுகிறார்களே, நாம் எதைத்தான் சாப்பிடுவது? இப்படி மருத்துவர்கள் கூறும் ஒவ்வொரு பொருளையும் நீங்கள் ஒதுக்க ஆரம்பித்தால் கடைசியில் எதையுமே சாப்பிட முடியாது. பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். எனவே, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்! வழக்கமாக நாம் உண்ணும் உணவு அனைத்தையும் தாராளமாகச் சாப்பிடலாம். சாப்பிடக்கூடாது என்கிற பொருட்கள் மிக மிகக் குறைவு.
நமது சிகிச்சையின்படி சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை நோய் குணமாகும். இரத்த அழுத்த நோயாளிகள் அவரவர் நாக்கு எவ்வளவு உப்புக் கேட்கிறதோ, அந்த அளவு உப்புச் சாப்பிட்டால் மட்டுமே இரத்த அழுத்தம் குணமாகும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வெள்ளைச் சர்க்கரை என்பது ஒரு விஷம்! கரும்பு ஆலையில் வேலை செய்யும் எவரும் வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட மாட்டார்கள். ஏனென்றால், வெள்ளைச் சர்க்கரையில் சல்பர் என்ற ஒரு கொடிய விஷம் கலக்கப்படுகிறது. எனவே, வெள்ளைச் சர்க்கரை என்ற விஷத்தைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரை, வெல்லம், தேன் போன்ற இனிப்புகளைத் தாராளமாக நிறைய எடுத்துக் கொள்ளலாம். அதே போல், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பொடி உப்புச் சேர்த்து கொண்டால்தான் பிரச்சினை. ஆனால், கல் உப்பு, இந்து உப்பு எனப்படும் பாறை உப்பு ஆகியவற்றைத் தாராளமாகச் சாப்பிடலாம். அவை இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும்.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாதென்று கூறுவார்கள். பிரச்சினை உருளைக்கிழங்கில் கிடையாது. உருளைக்கிழங்கை ஒழுங்காக ஜீரணம் செய்யவில்லையென்றால் அது வாயுத்தொல்லை உண்டாக்கும். ஆனால் நாம் உருளைக்கிழங்கை எப்படிச் சாப்பிட வேண்டுமென்ற வழிமுறையைத் தெரிந்து ஒழுங்காகச் சாப்பிட்டால் அது வாயுத்தொல்லையைக் குணப்படுத்தும். எனவே, வாயுத் தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது மூலமாகவே (நமது சிகிச்சையின் முறைப்படி) கண்டிப்பாக வாயுத்தொல்லையைக் குணப்படுத்தலாம். கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் நோய் வருமென்று கூறுவார்கள். உண்மையில், கத்தரிக்காய் சாப்பிட்டால்தான் தோல் நோய்கள் குணமாகும். கத்தரிக்காயில் தோலுக்குத் தேவையான தாதுப் பொருட்களும், உப்புக்களும் உள்ளன. கத்தரிக்காயைச் சரியான முறையில் ஜீரணம் செய்யாமல் சாப்பிடுவதால்தான் அதிலுள்ள தோலுக்குத் தேவையான சத்துப்பொருட்கள் அரைகுறையாக இரத்தத்தில் கலந்து, அது தோலுக்குச் செல்லும்பொழுது தோலில் நோய் ஏற்படுகிறது. எனவே, நமது முறைப்படி நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாகக் கத்தரிக்காயைச் சாப்பிட்டே தோல் நோய்களைக் குணப்படுத்த முடியும்!
இதுபோல, எந்த நோய்க்கு எதைச் சாப்பிட வேண்டாமென்று கூறுகிறார்களோ, அதைச் சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமாக அது நமக்கு மருந்தாகச் செயல்படுகிறது. எந்தப் பொருளை நாம் சரியாக ஜீரணம் பண்ணவில்லையோ அந்தப் பொருளிலுள்ள தாதுப்பொருட்கள் சில குறிப்பிட்ட உறுப்புகளுக்குச் செல்ல வேண்டியவை என்பதால், அந்த உறுப்புகளில் சில நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால், மருத்துவர்கள் அந்தப் பொருளையே சாப்பிடாதீர்கள் என்று ஒரேயடியாகக் கூறிவிடுகிறார்கள். இதனால் நோய் பெரிதாகிறதே தவிர, குறைவது கிடையாது. எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதே மிக மிக முக்கியம்!
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…
“