எனது திருமணம் காதல் திருமணமாக இருக்குமா? நான் ஒருவரை விரும்புகிறேன். அவருடன் திருமணம் நடக்குமா? என்று தெரிந்துகொள்ள வேண்டும். – கே.காந்திமதி, பழனி
அன்பு நிலாச்சாரல் வாசகி காந்திமதி அவர்களே!
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை ராசி ரிஷபம், லக்னம் மேஷம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெறும் திருமணம் அமைவதற்கான அமைப்பு உள்ளது. நல்ல மணவாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு இப்போது நடக்கும் ராகு தசை எப்படி இருக்கும்? எனக்கு வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளதா என்பதைச் சொல்லுங்களேன். – பி.சேகர், கோயம்புத்தூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் சேகர் அவர்களே!
37 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் கடகம் ஆகும். தங்களின் ஜாதகப்படி ராகு திசை ராகு புத்தி 20-08-2011 வரை நடைபெறும். இந்தக் கால கட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் கவனமாக இருத்தல் நலம். வெள்ளிக்கிழமை தோறும் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி வாருங்கள். ராகு பகவான் நன்மை பல தருவார். ராகு திசை தங்களுக்கு வளம் பல தர, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனது திருமணம் 3.4.06ல் நடந்தது. நானும் அவரும் நான் கருவுற்ற நாளிலிருந்தே (3 வருடங்கள்) பிரிந்து வாழ்கிறோம். எப்பொழுது ஒன்று சேருவோம்? – எம்.நாகேஸ்வரி, சிவகங்கை.
அன்பு நிலாச்சாரல் வாசகி நாகேஸ்வரி அவர்களே!
32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரேவதி ராசி மீனம், லக்னம் சிம்மம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், 5க்கு உடைய குரு 11-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், இந்த ஆண்டு டிசம்பருக்குப் பின் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் கிட்டும். தாங்கள் தினமும் விளக்கேற்றி, "துணையும் தொழுந்தெவ மும் பெற்ற, தாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி யாவ(து) அறிந்தனமே" என்ற பாடலைப் படித்து வாருங்கள். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“