நிற்காமல் ஓடும் நிலை கொள்ளா மனிதர்களே – சற்றே
நிமிர்ந்து பார்த்து என்றாவது
நடந்து செல்லும் மேகம் பார்த்ததுண்டா?
அதிகாலைச் சூரியனை
அரை நிமிடமேனும் காணும்
ஆவல் கொண்டதுண்டா?
பார்க்க பார்க்கப்
புதிதாய் இருக்கும்
‘நிலாமுகம்’ – நின்று ரசித்ததுண்டா?
அதற்குத் தோழிகள் போல்
அருகிலே நிற்கும் நட்சத்திரங்கள்
கண்சிமிட்டும் அதிசயம்
கண்டு வியந்ததுண்டா?
மறையப் போகும் அந்த
அரைமணி நேரத்திலும் தன்னை
அழகுப் பதுமையாய் அலங்கரித்துக் கொள்ளும்
அந்திச் சூரியன் பார்த்து
ஆனந்தப்பட்டதுண்டா?
தீண்டிச் சுகம் தரும்
தென்றல் நிறுத்தி
எங்கிருந்து வருகிறாய்
என்று விசாரித்ததுண்டா?
பூக்கள் பார்த்துப்
பேசியதுண்டா?
கடலின் பிரம்மாண்ட அழகில்
கரைந்ததுண்டா?
அருவி நீரின் ஓசையை
அமைதியாய்க் கேட்டதுண்டா?
இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும்
இறைவன், அவர்களின்
மரணத் தேதியைச் சற்றே
மாற்றி அமைக்கிறான்.
//மறையப் போகும்…………….ஆனந்தப் பட்டதுண்டா?// -நல்ல வரிகள்.!
மிக்க நன்றி பாலகிருஷ்ணன் சார்!!!
தீண்டிச் சுகம் தரும்
தென்றல் நிறுத்தி
எங்கிருந்து வருகிறாய்
என்று விசாரித்ததுண்டா?”…………பலமுறை விசாரித்துள்ளேன் !
“அருவி நீரின் ஓசையை
அமைதியாய்க் கேட்டதுண்டா?”……..எத்தனையோ முறை கேட்டுள்ளேன் !
உங்களைப் போலவே நானும் நிறைய ரசித்து, ரசிக்காதவர்களை கேட்டு இருக்கிறேன். அழகான கவிதை !
“
இயற்கையை ரசிக்க முடிந்தால் மட்டுமே கவிதையை ரசிக்க முடியும் என்பது என்னுடைய எண்ணம். மிக்க நன்றி ப்ரியா!
கவிதயின் பெரும்பாலான வரிகலை மோனை தொடையில் அமைத்து இருப்பது அழகாக இருக்கிரது.
unkka kavithai ennai nila ullakkulam kondu poi vittathu. Nila kavithai arumai.
எல்லாம் ரசித்துள்ளேன். அருமையான கவிதை.
அருமையான கவிதை வரிகள்