நவராத்திரி என்பது முப்பெருந்தேவியர்களான துர்கா(பார்வதி), லெக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களைப் போற்றிக் கொண்டாடப்படும் விழா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்த “தசரா” பண்டிகையை வெவ்வேறு முறைகளில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில், படிகளில் பொம்மைகள் வைத்து, பூஜைகள் செய்து நவராத்திரியைக் கொண்டாடுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று மறுநாள் நவராத்திரி விழா தொடங்கும்.
அமாவாசை அன்றே கொலு வைக்கத் தேவையான படிகளைத் தயார் செய்து, அதற்கு மேல் வெள்ளைத் துணி விரித்து பொம்மைகள் அடுக்கி பூஜைக்கு தயார் நிலையில் வைத்து விடுவார்கள். ஒன்பது படிகள் வைப்பது முறையாகும், ஆனால் அவரவர்கள் வசதிக்கேற்ப ஐந்து, ஏழு, ஒன்பது என்று படிகளை வைத்துக் கொள்ளலாம்.
கீழிருந்து மேலாக முதல் படியில் தாவரங்களிலிருந்து ஆரம்பித்து ஆறாவது படியில் ஆறறிவுடைய மனித பொம்மகளையும், ஏழாவது படியில் சித்தர்கள், மகான்களுடைய பொம்மைகளையும், எட்டாவது படியில் தெய்வத்தின் பொம்மைகளயும் வைக்க வேண்டும். ஒன்பதாவது படியில் கலசம் (பூர்ண கும்பம்) வைத்து பராசக்தியை அதில் வந்து அருளுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். கலசமானது ஆதிபராசக்தியின் அம்சமாகக் கருதப்படுகிறது. எல்லா ஜீவராசிகளும் ஆதிபராசக்தியிடம்
அடைக்கலம் என்ற கருத்தை வலியுறுத்தவே இவ்வாறு வைக்கப்படுகிறது என்பது ஐதீகம்.
கொலு வைத்த தினங்களில் வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் எல்லோருடனும் இன்முகத்துடன் இருக்க வேண்டும். தேவிகளின் துதிகளைப் பாடிப் பூஜைகள் செய்து, அருகில் உள்ள சுமங்கலிகளையும், சிறிய பெண் குழந்தைகளயும் கொலுவைக் காண அழைக்க வேண்டும். அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் மஞ்சள், குங்குமம், துணிகள் வைத்துத் தர வேண்டும்.
இப்படியாக எட்டு நாட்கள் பூஜைக்குப் பிறகு, ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜையில், சரஸ்வதி படத்தின் முன் புத்தகங்களை வைத்துப் பூஜை செய்ய வேண்டும். கல்வியின் மகத்துவத்தை உணர்த்தவே இப்பூஜை செய்யப்படுகிறது. இதே நாள் ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
பத்தாம் நாள் "விஜயதசமி" யாக – இந்த ஒன்பது நாட்களில் எந்த விக்கினங்கள்(கெட்ட செய்திகள்) வராமலும், இடையூறுகள் நேராமலும் காத்ததற்கு நன்றி சொல்லி கொண்டாடப்படுகிறது. கொலு பொம்மைகளைப் பத்திரமாக, அடுத்த வருடத்திலும் இதே போல் வீற்றிருந்து அருள் பாலிக்க வேண்டும் என பராசக்தியை வேண்டிக் கொண்டு எடுத்து வைக்க வேண்டும். இதே தினம் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய நாட்களில் கொலு பொம்மைகளுடன் அதற்கு அருகில் கலை நயத்துடன் கூடிய வகையில் பூங்கா, கடற்கரை, கோவில் முதலானவற்றை வைத்து அழகுபடுத்துகிறார்கள். இது குழந்தைகளின் கலைத்திறனை மேம்படுத்த உதவுவதால் மிகுந்த உற்சாகத்தோடு இதில் பங்கு பெறுகிறார்கள் குழந்தைகள். இப்படி கொலுவின் பத்து நாட்கள் முழுவதும் உங்கள் வீடு ‘பிக்னிக் ஸ்பாட்’ தான்.
“
நவராத்திரி பற்றிய குறிப்புகளும் படங்களும் நன்று. நாடுகள் பல கடந்து சென்றாலும் நாம் நவராத்திரி போன்ற விழாக்களைக் கொண்டாட மறப்பதில்லை. அமெரிக்காவில் மினியாபாலிஸில் அமைந்த கோவிலில் நவராத்திரி கொலு, அறுசுவை மதிய உணவு என அசத்தினர் நம்மவர்கள்.
நவராத்திரி பற்றிய அற்புதமான செய்தி.
டெவியின் நவரத்ரி கொலு புகைபடஙல் மட்ரும் நவரத்ரியின் சிரப்புகல் படிக்க அரிய வைப்பு. நவரத்ரி கொலுவின் ஒவ்வொரு படியில் வைக்கும் பொம்மைகல்லுக்கும் விலக்கம் சொல்லியிருக்கும் விதம் மிக அழக்கு. தமிழரை பிரன்த வொவ்வொருவரும் அரின்து கொல்ல வென்டிய செஇதி. ஓரு செயலை செஇய்யும்பொது கரன கரியஙல் அரியமலெய் செஇவதை விட அரின்து செயல் படுவது சல சிரன்தது. Dஎவியின் திருவிலயடல் தொடர Vஅழ்துக்கல் !!!!!!
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி!
அன்புடய தேவீ, உன் கருதுக்கும் தமிழ் தொன்டுக்கும் நன்றீ