நபர் – 1: யாருப்பா அவரு? ‘அவசரப்படாதீங்க! எல்லாருக்கும் உண்டு’ன்னு சொல்லி எல்லாருக்கும் நூறும் எரநூறுமா ரூபாய் நோட்டை அள்ளி அள்ளிக் குடுக்குறாரே! பெரிய கோடீஸ்வரரா?
நபர் – 2: நீ வேற, வாங்கின கடனை திருப்பி வாங்க சம்பளத்தன்னிக்கு ஆபீஸ்க்கே கடன்காரங்க வந்திருக்காங்க.
******
இதழாளர்: நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?
கவிஞர்: சரியா சொல்லணும்னா 10 கிலோ 300 கிராம்.
******
தொண்டன் – 1: நேத்து விழாவுக்குத் தலைவர் கொஞ்சம் அதிகமாவே குடிச்சிட்டு வந்துட்டார்.
தொண்டன் – 2: எப்படி சொல்றே?
தொண்டன் – 1: தேசிய கீதத்துக்குக் கைதட்டினாரே!
******
நண்பன் – 1: என்னை நீ ரொம்பவே அவமானப்படுத்திட்டே. அவமானப்படுறதுக்காக ஒண்ணும் நான் இங்க வரலை தெரியுமா?
நண்பன் – 2: அப்படியா? அப்போ அவமானப்பட வழக்கமாக நீ எங்க போவே?
******
நபர் – 1: டி.வி-க்குக் கொடுக்கணும்னு முடிவு பண்ணியே டைரக்டர் அந்தப் படத்த எடுத்திருப்பாரு போலிருக்கு.
நபர் – 2: எப்படி சொல்றீங்க?
நபர் – 1: விளம்பரங்களுக்கு நடுவில அப்பப்போ படம் வருதே!
******