Q. ஜீவனில் ஏற்றத் தாழ்வு உண்டா? ஜீவன் இறைவனுடன் கலக்குமா? இறைவன் திருவடியிலிருந்து பிறப்பிக்கப்படுகிறதா?
ஏற்றத் தாழ்வுகள் என்பது மனிதர்களால் உருவாக்கப்படுகிற விஷயங்கள். உலகத்திலுள்ள எல்லோரும் ஒரே பரமாத்ம சாகரத்தின் பல்வேறு அலைகள். ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதனுடைய காரம், மணம், குணம் எல்லாம் ஒன்று தான். Quantitative-ஆக difference இருக்கிற மாதிரி தெரியும். அதற்கு உங்களுடைய உழைப்பும், அதிர்ஷ்டமும் காரணம். பணக்காரன், ஏழை என்பதெல்லாம் இந்த உலகத்தின் அழியக்கூடிய விஷயங்கள். மனிதன் இறந்ததும் பணக்காரனா, ஏழையா என்று சொல்ல முடியுமா? மேனேஜர், ப்யூன் என்று சொல்ல முடியுமா? "நீ, நான்" என்று தான் சொல்ல முடியும்.
நான் என்கிற வார்த்தை எதுவுமல்ல. ஆபீஸில் வேலை செய்கிற ஒருவரைக் கேட்டால், நான் ஏழுமலை என்பார். மேனேஜரைக் கேட்டால் நான் கோவிந்தசாமி என்பார். எல்லோரும் பொதுவாக உபயோகப்படுத்தும் வார்த்தை ‘நான்’. நான் என்பது பதவி அல்ல; ஆணும் அல்ல பெண்ணும் அல்ல;
ஒருவரை சென்னையில் கேட்டால் நான் முனுசாமி என்று கூறுவார் அமெரிக்காவில் இருக்கும் போது
கேட்டாலும் முனுசாமி என்றுதான் கூறுவார். இடம், பொருள், ஏவல் என்று எதனாலும் மாறாத வஸ்து தான் நான்.
நான் என்பது சரீரம் அல்ல. சரீரத்திற்குள் இருக்கிற ஜோதிக்கு ‘நான்’ என்று பெயர். என்னுடைய பெட்டியை காணவில்லை என்று தான் கூறுகிறோம். ஆனால், பெட்டி என்பது belonging. நான் பெட்டி காணாமல் போய்விட்டேன் என்று சொல்லுவதில்லை. நான் உடம்பு சரியில்லை என்று கூறுகிறோமா? என்னுடைய உடம்பு சரியில்லை என்றுதானே சொல்கிறீர்கள் நான் is common for everything in the world.
“