நிருபர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்களில் கடைசியாக எடுத்த படம்தான் ரொம்பவும் சஸ்பென்ஸானதுன்னு எப்படி சொல்றீங்க?
டைரக்டர் : அந்தப் படத்துல கடைசி வரைக்கும் கதை என்னன்னு டைரக்டர் எனக்கேப் புரியலையே!
******
நபர் 1 : உங்க மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கறீங்க?
நபர் 2 : அவன் ரொம்பவும் ‘துறுதுறு’ன்னு இருக்கானே!!
******
நபர் 1 : நாக்கைப் பிடிங்கிட்டு சாகலாம்ங்கிற அளவுக்கு ரொம்பவும் அவமானமாப் போச்சு.
நபர் 2 : அச்சோ! அப்புறம் என்னாச்சு?
நபர் 1 : அப்படி செஞ்சா கை எச்சிலாயிடும்னு விட்டுட்டேன்.
******
பெண் 1 : அது ரொம்ப எமோஷனலான சினிமா. படம் பார்க்கும்போதே நான் அழுதிட்டேன்.
பெண் 2 : எந்த இடத்தில் நீ அழுதே?
பெண் 1 : படம் பார்க்க உட்கார்ந்திருந்த இடத்திலேயேதான் அழுதேன்.
******