யாரோ துரத்துகிறார்கள்
அல்லது
எழுதாத தேர்வில்
நேரம் தப்பிய அதிர்ச்சி
உச்சிக்குக் கொண்டுபோய்
உருட்டி விடும் எதிரி யாரென்று
பல கனவுகளுக்குப் பின்னும்
தெரியவில்லை.
நேரில் பேச இயலாமல் போன
சின்ன வயசு சிநேகிதி
கனவில் அநாயசமாய்
ஒரு புன்னகை
வீசிப் போகிறாள்
சில நாள் கனவில்
அவள் பேசியது
கண் விழித்தபின்
மறந்து போகிறது
கனவுகள் எதுவானாலும்
அவற்றின் வரவு
ஒவ்வொரு இரவின் தொடக்கத்திலும்
மனதின் எதிர்பார்ப்பாகிறது
கனவுகளற்ற இரவுகள்
அதனை அடுத்த பகல்களில்
நினைவின் உறுத்தல்கள்!
வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகள் ஏக்கங்களாகி கனவுகளில் ஆக்கம் பெறுகின்றன, காமத்துப் பாலில் திருவள்ளுவர் பல இன்பக்கனவுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டுவார், கனவு மெய்ப்படவேண்டும் என்று பாரதி தொடங்கி ரிஷபன் வரை அனைவரும் விரும்புகிறோம், நன்று. -அரிமா இளங்கண்ணன்
கனவினை பற்றி ஏற்கனவே நான் கீக்கு எழுதியுள்ளேன். பிரசுரமகவில்லை,கனவில் எழுதிய கவிதை. கனவும்,காதலும் ஒன்றானது.ஒருதலைகதலால். பிணமானென் கனவுகள் வராத விடியலில். என் மனதிற்க்கு பிடித்த கவிதை.”