அமெரிக்கக் குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சன், தலைவராக வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே வெற்றிக்காகப் பத்து அம்சத் திட்டம் தீட்டினார். அதை அப்படியே கொடுக்கிறோம்.
1) பிறர் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! அது எப்போதும் உங்களுக்கு உதவும்.
2) இனிமையாகப் பழகுங்கள்! முகம் சுளித்தல் கூடாது!
3) எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்! உங்கள் மனநிலை பாதிக்கப்படாது.
4) அகந்தையை அறவே அகற்றுங்கள்!
5) உங்களோடு பழகுவதால் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் நன்மை கிடைக்கும் வகையில் நடந்துகொள்ளுங்கள்!
6) உங்களிடம் உள்ள சில பிசிறு போன்ற குணங்களை உதறித் தள்ள முயலுங்கள்!
7) பிறருடன் ஏற்படும் கருத்து வேற்றுமையைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முயலுங்கள்!
8) பிறரை நேசிப்பதை உங்கள் இயற்கையான சுபாவமாக மாற்றிக்கொள்ளுங்கள்!
9) அடுத்தவருடைய ஒவ்வொரு சாதனையையும் முழு மனதோடு பாராட்டுங்கள்! அவர்களுடைய துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!
10) முக்கியமாக, நீங்கள் பழகும் ஒவ்வொருவருக்கும் ஆன்மிக வலிமை மிகும்படிச் செய்யுங்கள்!
மேற்சொன்ன பத்து கட்டளைகளையும் முழுவதும் பின்பற்றி நடந்ததால் ஜான்சனுக்குக் காங்கிரசில் நல்ல பெயரும் ஆதரவும் கிடைத்தன.
எனவே, இந்த வார ‘ஊருக்கு உபதேசம்’!
உங்களை முதலில் வெற்றிக்குத் தகுதியானவராக மாற்றிக்கொள்ளுங்கள்!
வெற்றி தன்னால் உங்களைத் தேடி வரும்!
(நன்றி: The Magic of thinking big – David J.shwartzp.Hd)