தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
பால் – 1.5 கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் – 2
முந்தரி – 8
நெய் – 1 மேசைக் கரண்டி
சிகப்பு(அ) மஞ்சள் கலர் பொடி சிறிதளவு
செய்முறை:
1. முந்திரியை பொடியாக அரிந்து, அடிப்பிடிக்காத பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும்.
2. அதே பாத்திரத்தில் ஓட்ஸை மிக்ஸியில் பொடித்து வறுத்துக் கொள்ளவும்.
3. பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து மிதமான தீயில் ஓட்ஸை வேக வைக்கவும்.
4. ஓட்ஸ் கட்டிகளாகாமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்கவும்.
5. ஓட்ஸ் நன்கு வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறவும்.
6. சிகப்பு (அ) மஞ்சள் கலர் பொடி சேர்த்து கிளறவும்.
7. வறுத்து வைத்துள்ள முந்திரியைக் கொட்டி கிளறி, மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறினால் சுவையான ஓட்ஸ் அல்வா ரெடி.
வேண்டுமானால் மேலும் நெய் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரைக்குப் பதில் பனங்கற்கண்டு கலந்து செய்தால் சுவை கூடும்.
“