Q. ‘மனம் சொல்வதை உடனே கேட்காதே; புத்தியை உபயோகப்படுத்து’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே?
ஆத்மா தான் உயர்ந்தது.
உங்களுடைய (mobile) கைபேசியில் chip இருந்தால் அதில்தான் எல்லாம் பதிவாகியிருக்கின்றன. அது குறிப்பிட்ட செல் (instrument) விட்டு வேறு செல்லிற்கு (instrument) போகும் போது அந்த chipல் என்ன பதிவாகியிருக்கிறதோ அது அப்படியே இருக்கும். அப்படித்தான் ஆத்மாவும் – chip போன்றது தான். Chip வெவ்வேறு செல்லிற்கு போகிற மாதிரி ஆத்மாவும் வேறு வேறு உடம்பிற்கு செல்கிறது. ஒரு DVD பார்க்கிறோம் அதைப் போட்டால் எவ்வளவு பாடல்கள் வருகின்றன. Pendrive என்று சொல்கிறார்கள். அதில் பாடல்களை ஏற்றி விட்டு காரில் போட்டால் 3மணி நேரத்திற்கு பாட்டு வந்து கொண்டே இருக்கின்றன. இதிலே இவ்வளவு சேமித்து வைக்க முடியும் என்றால் ஆத்மாவில் இருக்க முடியாதா? லட்சக்கணக்கான பிறவிகளினுடைய ஞாபகங்கள் அதில் இருக்கும்.
ஒளி உடம்பு என்கிறோம். அந்த சக்கரங்களைப் பற்றி பேசுகிறோம். நீ medical collegeகுப் போய் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாலும் ஒரு சக்கரமும் கண்ணிற்கு தெரியப் போவது இல்லை. சக்கரம் என்பது ஒரு ஒளியில் வரக்கூடியது it is an energy flow and it is not an organ.