எனக்கு வயது 28. கல்யாணத் தடை ஏற்படுகிறது. நல்ல இடம் எப்போது வரும்? மிகவும் கவலையாக இருக்கிறது. – சரஸ்வதி, கோலாலம்பூர்
அன்பு நிலாச்சாரல் வாசகி சரஸ்வதி அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் சிம்மம் ஆகும். திருமண பாக்கியத்தை அளிக்கும் குரு பகவான், மே மாதம் முதல் 7-ம் இடத்திற்கு வந்து அங்கு 3 மாத காலம் தங்குகிறார். அதன் பிறகு டிசம்பர் மாதம் முதல் 7-ம் வீட்டில் ஓராண்டு காலம் தங்குகிறார். இவை இரண்டும் தங்களுக்கு திருமண பாக்கியத்தை அளிக்கும் காலகட்டமாகும். ஜாதகியின் நட்சத்திரமான மூலம் கேதுவின் சாரம் பெற்றிருப்பதால், வெள்ளிக்கிழமைகளில் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி வரவும். அல்லது நாக முத்து மாரியம்மனை வழிபட்டு வரவும். ஜாதகி தினமும் அபிராமி அந்தாதியில், "அதிசயமான வடிவுடையாள்" எனத் தொடங்கும் 17வது பாடலைப் படித்து வர, விரைவில் திருமணம் கை கூடும்.
என் வாழ்க்கையில் பல நிர்பந்தங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். இனி வரும் காலம் எப்படி இருக்கும்? குடும்ப ஒற்றுமை காண வழி உண்டா? – பாலகுமார், தஞ்சாவூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. பாலகுமார் அவர்களே!
34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் மேஷம் ஆகும். தங்களின் குலதெய்வத்தை முறையாக வழிபட்டு வர, குடும்ப ஒற்றுமை பலப்படும். தங்களின் லக்னாதிபதியான செவ்வாயை செவ்வாய்க் கிழமை தோறும் ஆராதித்து வர, எதிர்காலம் வளம் பெற்று விளங்கும்.
நான் காதலித்தவருடன் எனது திருமணம் நடக்குமா? எனது ராசி ரிசபம், நட்சத்திரம் கிருத்திகை – காந்திமதி, திண்டுக்கல்.
அன்பு நிலாச்சாரல் வாசகி காந்திமதி அவர்களே!
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை, ராசி ரிஷபம், லக்னம் மேஷம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, காதலித்தவருடன் திருமணம் நடைபெறும் வாய்ப்பிருக்கிறது.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“