ஓர் ஊரில் ஒரு சங்கீத வித்வான். பல்லவி பாடுவதில் சிறந்தவர். இவருக்கேற்ற துணைவியார். இல்லை என்ற வார்த்தையை இவ்விருவரது வாழ்க்கையில் சிறிதும் அறியாதவர்கள்.
சாதி – மதம் – பேதம் பார்க்கத் தெரியாதவர்கள். சொந்தம் – பந்தம் – பெரியோர் – சிறியோர் அனைவரையும் சமமாகக் கருதுபவர்கள்.
யார் வந்தாலும் முதலில் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதேனும் தந்துவிட்டுத்தான் பிறகு மற்ற விபரங்களைப் பேசுவர். இரண்டு பக்கமும் இரட்டிப்பு மகிழ்ச்சி தவழும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வந்து அளவளாவி ஆசிர்வாதம் பெற்றுச்செல்வது அன்றாட நிகழ்வு.
இந்த வித்வான் வருடா வருடம் பல இன்னிசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார். பற்பல சங்கீத வித்வான்கள் பாட வருவர். பல ஊர்களைச் சேர்ந்தவர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வந்து சங்கீதத்தை கேட்டு மகிழ்வோர் எண்ணிலடங்கா.
இதில் என்ன விந்தை என்று கேட்கிறீர்களா?
அரிசி – மளிகை சாமான் – நெய் – காய்கறி மற்றும் பணமாக வசூல் செய்து சங்கீதக் கச்சேரியை ஒரு திருவிழாவாக நடத்துவர். தினந்தோறும் ஒரு சிறந்த சங்கீத வித்வானின் இன்னிசைக் கச்சேரி நடக்கும்.
கச்சேரி முடிந்ததும் நல்விருந்து. விருந்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கச்சேரி பாடிய வித்வான் ஒருபுறமும் அவரை ஏற்றி வந்த ரிக்ஷாக்காரன் மறுபுறமும் ஒரே பந்தியில் உட்கார்ந்து சமமாக சாப்பிடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவருடைய அன்புக்கும் மனித நேய செயலுக்கும் சகலரும் கட்டுப்படுவர். இந்த சங்கீத வித்வானோ துர்வாசரையும் விசுவாமித்திரரையும் சேர்ந்த கலவை. பிடிவாத குணமும் வேறு.
இச்சங்கீத வித்வானுக்கென்றே ஒரு சீடன் வந்து சேர்ந்தான்.
சீடனோ வித்வானை தன் குருவாகவே எண்ணி அவர் போகிற போக்கிலே போய் அவரை தன் வழியில் வரவழைத்து சம்மதிக்க வைப்பதில் குருவிற்கேற்ற சீடன்.
உள்ளுர் வெளியூர் எங்கு சென்றாலும் சீடனைத் தன்னுடன் அழைத்துச்செல்வார். காலப்போக்கில் சீடனுக்கு கொடுக்காமல் சீடன் சாப்பிடாமல் இவர் சாப்பிடமாட்டார்.
காலனின் கட்டாயத்தில் சங்கீத வித்வானின் துணைவியார் இறந்துவிட வித்வானோ அவரிடம் பக்தி கொண்ட ஒரு கிருத்தவப் பாடகரின் வீட்டில் போய் தங்கிவிட்டார்.
சங்கீத வித்வானின் வயது முதிர்ச்சியின் காரணமாக அவருக்கென்றே தனி அறை ஒன்றையும் மருத்துவ வசதி உள்பட சகல வசதிகளுடன் அந்த கிருத்தவ பாடகர் செய்து கொடுத்தார்.
சீடனுக்கு நல்ல வேலை கிடைத்து அவனுக்கென்று ஒரு குடும்பமாயிற்று. சீடன் தவறாது வித்வானைப் பார்க்க சென்று வருவதை வழக்கமாகக் கொண்டான்.
ஒரு சமயம் வித்வான் சீடனைப் பார்த்து "நான் அதிக நாட்கள் உயிருடன் இருக்கமாட்டேன். எனக்குப் பிடித்த சோன்பப்படி – சிலேப்பி – அல்வா – பொங்கல் – சர்க்கரைப்பொங்கல் – புளியோதரை மற்றும் கூட்டு இவை அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்" என்றார்.
கேட்டபடி அனைத்தையும் தயார் செய்து கொண்டு வித்வானிடம் சமர்ப்பித்தான் சீடன்.
அதை அந்த கிருத்தவப் பாடகரிடம் ‘இவன் என் வளர்ப்பு சீடன்’ என்று பெருமையாக சொன்னது மட்டுமல்லாது சீடன் கொண்டு வந்து கொடுத்த அனைத்து பதார்த்தங்களையும் அவருக்குக் கொடுத்த பின்னர் தானும் மகிழ்ச்சி அடைந்தார்.
சீடனை பரிபூரணமாய் ஆசீர்வாதம் செய்தார்.
சிறிது காலத்தில் வித்வானும் மரணம் அடையவே அவரை தன்னை வளர்த்த குருவாகவே எண்ணி எண்ணி நான் தோறும் வாழ்ந்து வந்தான் குருவிற்கேற்ற சீடன்.
உண்மைக் கதை போலவே இருக்கிறது..
கத ரொம்ப மொக்க…….
இதற்கு பெயர் கதையா? சின்ன குழந்தை கற்பனை போல இருக்கிறது!!
ஏன் இப்டி?ரொம்ப மோசம்!!
உன்மை அனுபவித்தவர்கலுக்கு இதன் உன்மை புரியும். மத்தவர்கலுக்கு தெரிய வாய்ப்பில்லை.
கதையின் கரு உண்மையானாலும் கற்பனையானாலும் வாசகர்கள் ரசிக்கத்தக்க விதத்தில் எழுதினால்தான் ஒரு கதை வெற்றி பெறும். இந்தக் கதை உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கையாக இருக்குமானால் வரவேற்கத் தக்கதே. இந்தக்கதையில் வாசகருக்கு எழக்கூடிய சந்தேகங்கள் பல.
1.வித்வானை ஏன் அந்த சீடன் வைத்துக் காப்பாற்றவில்லை?(நல்லவேலை கிடைத்தபிறகும் கூட)
2.யாரோ ஒரு கிறித்துவப் பாடகர் வைத்துக் காப்பாற்றவேண்டிய அவசியம் என்ன?
3.வித்வான் ஆசைப்பட்ட உணவு வகைகளை அந்தப் பாடகரால் ஏற்பாடு செய்யமுடியவில்லையா?
4. அப்படி ஊரே கொண்டாடிய வித்வான் கடைசி காலத்தில் ஏன் வேறு ஆதரவின்றி வாடும் நிலை உண்டானது? அதற்கும் கதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அவருடைய பிடிவாத குணத்துக்கும் தொடர்பு உண்டா? அப்படியிருப்பதற்கான நிகழ்வு ஒன்றையேனும் கதையில் குறிப்பிட்டிருந்தால் வித்வானின் இறுதிக்காலத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியும்.
5.வித்வானை அடிக்கடி வந்து பார்க்கும் சீடனை கடைசியில்தான் தன் வளர்ப்பு சீடன் என்று பாடகரிடம் அறிமுகப்படுத்துகிறார். ஏன்?
6.குருவிற்கேற்ற சீடன் என்பது கதையின் தலைப்பு. சீடன் பல இசைக்கச்சேரிகளை தன் குருவைப்போலவே தொடர்ந்து நடத்தி அவருக்குப் பெருமை சேர்த்தான் என்றால் தலைப்பு பொருந்தி இருக்கும்.
பல விஷயங்களைச் சொல்லாமல் விட்டதால் நிறைவு உண்டாகவில்லை. அதுவே பின்னூட்டங்களில் வெளிப்பட்டுள்ளது. இன்னும் சற்றுச் செதுக்கியிருந்தால் சிறந்த கதையாக அமைந்திருக்கும். இவ்விமர்சனத்தைக் குறையாகக் கொள்ளாமல் கூடுதல் அக்கறை செலுத்த எடுத்துக்கொண்டால் மிகவும் மகிழ்வேன். நன்றி.
What a waste of time and effort on the part of the author, waste of cyberspace, and a waste of time on the part of readers! This time the readers are right about their comments.
Tகன்க்ச் டொ Mச்.Gஏத. ஈ எ௯பெcடெட் திச் cஒம்மென்ட்ச். Tகிச் இச் அ ரெஅல் ச்டொர்ய் அன்ட் நெல்cஒமெ தெ ரெஅடெர்ச் cஒம்மென்ட். ஈ அccஎப்ட் தட் இ கவெ மிச்செட் cஎர்டைன் இன்fஒர்மடிஒன் இன் திச் ச்டொர்ய் அன்ட் அச் யொஉ நிஷ், இ நில்ல் ரெ-ந்ரிடெ தெ சமெ. Mஅன்னை Pஅசந்ய்
Tகன்க்ச் டொ Mச்.Gஏத. ஈ எ௯பெcடெட் திச் cஒம்மென்ட்ச். Tகிச் இச் அ ரெஅல் ச்டொர்ய் அன்ட் நெல்cஒமெ தெ ரெஅடெர்ச் cஒம்மென்ட். ஈ அccஎப்ட் தட் இ கவெ மிச்செட் cஎர்டைன் இன்fஒர்மடிஒன் இன் திச் ச்டொர்ய் அன்ட் அச் யொஉ நிஷ், இ நில்ல் ரெ-ந்ரிடெ தெ சமெ”
கதையைத் தமிழில் எழுதும் தாங்கள், பின்னூட்டத்திற்குப் பதிலையும் தமிழில் தட்டச்சு செய்தால் என்ன? என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஒன்றுமே புரியவில்லையே!”
Totally time waste. Waste Story
Dear Pasanthi Sir
Instead of going behind the awards, request you to do some social service and activity to the society, which yields self satisfaction rather than awards. Hope you take it in positive way