அம்மா எனக்கு எப்போது நல்ல நேரம் வரும்? என் கணவரோடு நான் எப்போது சேர்ந்து வாழ்வேன். தயவுசெய்து சொல்லுங்கள். விஜயலக்ஷ்மி, திருச்சி.
அன்பு நிலாச்சாரல் வாசகி விஜயலக்ஷ்மி அவர்களே !
32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அஸ்வினி, ராசி மேஷம் , லக்னம் விருச்சிகம். தங்களின் ஜாதகப்படி, 7-ம் வீடு என்றழைக்கபடும் களத்திரக்காரகனாகத் திகழும் நவகிரகமான சுக்கிரனை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள். இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில், தாங்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு கனிந்து வரும். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
என்னுடைய காதல் நிறைவேறுமா? அதற்கு பெரியவர்கள் சம்மதிப்பார்களா? ப்ரியா, காக்காவேரி.
அன்பு நிலாச்சாரல் வாசகி ப்ரியா அவர்களே !
18 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி கன்னி, லக்னம் கன்னி. தங்களின் ஜாதகப்படி, தங்களின் ஆசை நிறைவேறும். சற்றே பொறுமையாக இருந்தால், பெரியவர்களின் சம்மதமும் கிட்டும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், .
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response
“