11.
ஒரே காற்றையே
சுவாசித்துவருகிறேன் –
யுகாந்திரமாய்…
ஒரே சித்திரத்தை
மீண்டும் மீண்டும் வரைகிறேன்
காலகாலமாய்…
ஒரே கவிதையை
திரும்பத் திரும்ப எழுதுகிறேன்
தினந்தினம்…
ஒரே மந்திரத்தை
மூச்சென உச்சரிக்கிறேன்
விழிப்பிலும் கனவிலும்…
அந்தக் காற்று
அந்தச் சித்திரம்
அந்தக் கவிதை
அந்த மந்திரம்
அதீதா.
12.
வெகு அழகானதுன்
வீடு
அதன் அறைகள்
மிகவும்
நேர்த்தியானவை
அதன்அலங்காரங்களும்
தோரணங்களும்
கண்ணுக்கு இதமளிப்பவை
மிகவும் ஆவலாயிருக்கிறது
உன் வீட்டினுள்
புகுந்து வசிக்க
தருவாயா அனுமதி?
13.
பாராமுகம் காட்டி
கடந்துபோகிறாய் என்னை
உன் ஒழுங்கமைவும்
அசைவின் இசைவும்
திருவிழா குதூகலத்தை
ஊட்டுதென்னுள்
அலங்கரித்த தேராய்
நகர்கிறாய்
வெற்றாய்க் கிடக்குமென்
வீதியில்
எனினும்
உன் பாராமுகம்
எனக்கானதல்ல என்பதும்
உன் உயிர்ப்பூ
என்னுள் வேர்விட்டிருப்பதும்
நமக்கு மட்டுமேயான
அதிரகசியமாய்.
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“
கவிதைன்னு சொன்னிங்க ஒன்னும் கவிதையாக தெரியல…?
னம்பிக்கையொடு இருக்கிரென்
னாட்கலை என்னிக்கொன்டு…
போர்படை வீரர்!
– கவி சுவாதி
இதுதான் கவிதை!