வந்தனம் வந்தனம் என வாசகர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்றது… வேற யாரு? கொங்கு நாட்டு சிங்கிதான்! என்னோட முதல் அரட்டையை படித்துக் கருத்துச் சொன்ன உங்க எல்லோருக்கும் நன்றி! நன்றி!
நான் ஏதோ விளையாட்டாய் ஜோவோட பாட்டைக் கண்டுபிடிக்க, எடிட்டரம்மா அரட்டையில பங்கு கொடுக்க, ரிஷியும், வாசகர் ஜோதியும் ‘கலக்கல்’ கவிதான்னு பேர் வைக்க, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திட்டேன். (நமக்கு சீட் கொடுக்கலைன்னா கொங்கு முன்னேற்றப் பேரவைத் தொண்டர்கள் போராட்டம் நடத்திவிடமாட்டர்களா?)
நிலாச்சாரல்ல போட்டி இருந்தாத்தானே புதுமாதிரியான படைப்புகளை கொடுக்க முடியும்? எங்களுக்குள்ளே இருக்கிற போட்டி, அன்பு நிறைந்த ஆரோக்கியமான போட்டி.. பொறாமை உணர்வு இல்லாம, நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக்கறதோட ‘நான் இன்னும் நல்லாச் செய்யணும்’னு ஒரு உத்வேகத்தோட வேலை செய்யறமாதிரி இருக்கு. அதுதான் நிலாச்சாரலோட ஸ்பெஷாலிடி. நாங்க எவ்வளவு பாசக்கார பருத்திவீரர்களுன்னு ஜம்புநாதன் சாரோட கட்டுரையை படிசசீங்கன்னா தெரியும். அதைப் படிக்க கீழே சொடுக்குங்க:
https://www.nilacharal.com/ocms/log/01190915.asp
ஒரு கூட்டுக் குடும்பத்தோட முதல் மருமகளாய் ஒரு பெண்ணிற்கு இருக்கும் கடமைகளோட, மாவட்ட ஆட்சியராக விரும்பி, புத்தகம் தேடி லைப்ரரி போன போதுதான், ஜம்புநாதன் சாரை சந்தித்தேன். என் நிலாச்சாரல் வெற்றிகள் அனைத்தையும் அவருக்குச் சமர்பிக்க இந்த அரட்டையை பயன்படுத்திக் கொள்கிறேன். என்னை மாதிரியே குடும்பத் தலைவியாய் இருந்தாலும் எழுத்துலகில் தனக்கென ஒரு இடம் வைத்திருக்கும் திருமதி. விமலா ரமணியுடனான நேர்முகத்தை ரசிக்க:
https://www.nilacharal.com/tamil/interview/vimala_ramani_308.asp
அவர் மட்டுமல்ல, குடும்பப் பணிகளுக்கிடையே தனக்கென ஒரு இடத்தை, விரும்பிய துறையில் பிடிக்கப் போராடும், ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதனையாளரே!. வீட்டில் இருந்தாலும் அந்தக் குடும்பத்தோட முன்னேற்றம், மகிழ்ச்சி, குடும்பத்துப் பெண்கள் கையில் இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து. நீங்களெல்லாம் மகளிர் தினம் கொண்டாடி இருப்பீங்க. இல்லாவிட்டாலும் கேள்விப்பட்டாவது இருப்பீங்க. குடும்பத்துக்கும், வேலைக்கும் மட்டுமே நேரத்தைச் செலவழிக்கற பெண்களைப் பார்த்திருப்பீங்க. நீங்கள் ஆணாய் இருந்தால், உங்க வீட்டு மகளிருக்கு அவங்களுக்கென ஒரே ஒரு மணி நேரமாவது ஒதுக்கிக் கொடுங்கள். பெண்ணாய் இருந்தால் குடும்பத்தினரிடம் புரிய வைத்து, ஒரு மணி நேரம் உங்களுக்காய்ச் செலவிடுங்கள். அதில் உங்களுக்குப் பிடித்த கைவேலை, பாட்டு, எழுத்து எனச் செலவிடுங்கள் (சீரியலை விடுங்கள் இப்போதாவது). உங்கள் மன ஆரோக்கியமே குடும்பத்தின் ஆணிவேர்.
மன ஆரோக்யம் பற்றி எங்க பாட்டி சொன்ன கதை ஞாபகம் வருது. ஒரு ஊர்ல, ஒரு ராஜாவாம், அந்த ராஜாவுக்கு… சரி, சரி அடிக்க வராதீங்க! மாலீக், அந்த சைக்கிள் செயினை கீழே போடுங்க! இப்படியெல்லாம் டெரரா பிகேவ் பண்ணினா ரத்தக்கொதிப்பு வந்திரும். எனக்கு எப்படித் தெரியும்னு பாக்கிறீங்களா? நிலாச்சாரலில் டாக்டர் விஜயராகவன் எழுதிய மனித உடலியல் தொடரை படிசசோம்ல… நீங்களும் உங்க உடலைப் பற்றித் தெரிந்து கொள்ள:
https://www.nilacharal.com/ocms/log/10200806.asp
சரி கதைக்கு வருவோம். பாட்டியோட கிளாஸ் டீச்சராய் இருக்கற வகுப்பில் மாணவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டாங்களாம். நாளுக்கு நாள் சண்டை அதிகமாச்சே தவிர குறையலை. என்ன செய்யலாம்னு யோசிச்ச லதா பாட்டி, வகுப்பிலுள்ள குழுக்ளை எல்லாம் அழைச்சு அவங்களுக்கு பிடிச்ச ஏதாவதொரு காய்கறியைஒரு சின்ன பை நிறைய எடுத்து வரச் சொன்னாங்களாம். மறுநாள் பள்ளிக்கு வந்த எல்லோரும் பை கொண்டு வந்திருக்க, அவங்ககிட்ட ‘இந்தப் பையை யார் எங்கே போனாலும், நான் சொல்லும் வரை கூடவே எடுத்து செல்லணும்’ அப்படின்னு ஒரு கட்டுப்பாடு விதிச்சாங்களாம். மாணவர்களும் அதைக் கடைபிடிக்க, ஒரு வாரத்தில் பையிலிருந்த காய்கள் அழுகி, துர்நாற்றம் வீச ஆரம்பிச்சதாம். 10-ம் நாள் நாற்றம் தாங்கமுடியாமல் மாணவர்கள், லதாப் பாட்டிக்கிட்டே பையைத் தூக்கி எறியப்போறதாய்ச் சொன்னாங்களாம். அதுக்குப் பாட்டி, ‘ஒரு 10 நாள் கூட துர்நாற்றத்தை உங்களால் தாங்கமுடியலையே! மற்றவங்க மேலே வைச்சிருக்கிற வெறுப்பு, பொறாமை, கோபம் கூட இந்த துர்நாற்றம் மாதிரிதான். அது நாள் ஆகும் போது உங்க மனதை துர்நாற்றம் வீசும் இடமாக மாற்றிவிடும். அந்த மாதிரி எதிர்மறை எண்ணங்களை உடனே மனதை விட்டுத் தூக்கி வீசணும்’னு சொன்னாங்களாம். அந்த நிகழ்வுக்குப் பின் மணிலதா டீச்சர் கிளாஸ்ல யாரும் சண்டையே போடலையாம். உங்களுக்கும் யார் மேலயாவது கோபம் இருந்தால் அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு போயிட்டே இருங்க.
சரி, சரி, ரொம்ப சீரியஸா பேசிட்டேன். ரிலாக்ஸ் பண்ண இஷா யோகா மையத்தோட இசையைக் கேளுங்க.
http://www.nilashop.com/product_info.php?products_id=453
நம்ம ஈரோடு வாசகர் செல்வம் இந்த இசைக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்கார். அவர் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.
இந்தியாவின் பழம்பெருமைகளில் ஒன்றான யோகா உலகெங்கும் பரவி நமக்கு பெருமை சேர்க்குது. அதே போல இயற்கை விவசாயத்திலும் நாம்தான் முன்னோடிகள். ஆனா அதை மறந்திட்டு மூட்டை மூட்டையாய் இராசாயன உரங்கள் கொட் டி மண்ணை மலடாய் மாத்திட்டோம்.
அந்த நிலையை மாற்ற, விவசாயத்திலும் லாபம் சம்பாதிக்க முடியும்னு கத்துத் தர விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ உதவியா இருக்கு. .உங்களால் முடிந்தளவு இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களை பக்கத்தில இருக்கிற விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி நம்முடைய செஞ்சோற்றுக் கடனைக் கழிக்கலாமே!
கடைசியாய், ரொம்ப நாளா, ரிஷின்னு பிரம்மச்சரியம் கடைப்பிடிச்ச ஒருத்தர், போன அரட்டையில தன் நண்பனோட திருமணப் போட்டா போடற சாக்கில் தன் போட்டோவையும், தன் நிஜப்பெயரையும் போட்டிருக்கிறதைப் பார்த்தால், துறவறம் துறந்து இல்லறம் போறாப்பல இருக்குது? யாருக்காவது விஷயம் தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க! (ரேவதிம்மா! உங்க பேச்சைக் கேட்காத ரிஷிக்கு வச்சிட்டேன் பாத்தீங்களா ஆப்பு! சொன்னதுக்காக எனக்கு ஒரு ஸ்பெஷல் கோலம் அனுப்புங்க.)
ரிஷியோட முறைப்பிலிருந்து தப்பிக்க, எங்க தலைவர் ஜோவோட பாதுகாப்பில், “அன்பாய் இருங்கள்! ஆரோக்கியமாய் இருங்கள்!” எனக் கூறிப் போய் வருகிறேன்.
“
//துறவறம் துறந்து இல்லறம் போறாப்பல இருக்குது?//
உங்களுக்குச் சொல்லாமலா? :-))
என்னங்க… தலைவர் பட்டமெல்லாம் குடுத்துட்டீங்க.. வேணாங்க.. நான் வாலுப்பையனாவே இருந்துக்குறேன். அப்போ தான் நிறைய சேட்டை செய்ய முடியும்.. :))
:-))