பிரட் புஜியா

தேவையான பொருட்கள்:

பிரட் – 6 துண்டுகள்
முட்டை – 3
வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு
எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
சோம்பு – சிறிது (தாளிக்க)
பச்சை மிளகாய் – விரும்பினால்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, மிளகுத்தூள் கலந்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
2. பிரட் துண்டுகளை நீளவாக்கில் சிறு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு தாளித்துக் கொள்ளவும்.
4. பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் பச்சை மிளகாய் சேர்த்தும் வதக்கிக் கொள்ளலாம்.
5. வெங்காயம் நன்கு வதங்கிய பின், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி மிதமான தீயில் சுருள வதக்கவும்.
6. சிறு துண்டுகளாக்கிய பிரட்டை, வாணலியில் முட்டையுடன் கலந்து வதக்கிக் கொள்ளவும்.
7. பிரட் பொன்னிறமானதும் அடுப்பிலிருந்து இறக்கி, அதன் மேல் கொத்தமல்லித் தழை தூவிப் பறிமாறவும்.

About The Author

5 Comments

  1. RAMESH KARTHI

    எனென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெஙுகு தொட்டாலும் இனிமை

  2. Dr. S. Subramanian

    ரமேஷு உஷாரு! கவிதா கொங்கு நாட்டு சிங்கியாக்கும்!!!!!!!

  3. Dr. S. Subramanian

    பரிமாறுதல் அன்றோ அது?
    பறிமாறுதல் அல்லவே!

  4. Askraf

    கவிதாவின் சமயல்குறிப்பு தேவலாம்.அவசர உலகத்துக்கு உகந்த உணவு.

  5. Kavitha Prakash

    ரமேஷ் ,

    என்னோட படைப்புக்களை பாராட்டியதிற்கு நன்றி.

    டாக்டர் ஸார்,

    தவறுக்கு வருத்தங்கள்.
    நன்றி ஆச்க்ரf

Comments are closed.