ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படுமா அல்லது காதல் திருமணமா? எப்போது நடக்கும்? – கார்த்திக் சந்தானம், சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகர் கார்த்திக் சந்தானம் அவர்களே !

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி மகரம், லக்னம் ரிஷ்பம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, குரு திசை, சனி புக்தி 08.08.2011 வரை நடை பெறும். இந்தக் காலகட்டத்திற்குள், பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டு தங்களின் திருமணம் நடைபெற்று விடும். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*******************************

லக்னத்தில் ராகு, செவ்வாய் மற்றும் புதன் இருப்பது நலமா? 9 ல் இருக்கும் குருவின் மீது அசுப கிரகங்களின் பார்வை உள்ளதா? அதன் பலன் பற்றி கூறவும் – கோபாலகிருஷ்ணன், திருநெல்வேலி

அன்பு நிலாச்சாரல் வாசகர் கோபால கிருஷ்ணன் அவர்களே !

19 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் தனுசு ஆகும். தங்களின் ஜாதகத்தில் லக்னத்திலிருக்கும் ராகு, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் குருவின் 5-ம் பார்வையைப் பெறுவது நல்ல அமைப்பு. ஏனெனில் குருவின் பார்வை கோடி தோஷம் விலக்கும் என்ற பழமொழி உண்டு. அத்துடன் குரு, தங்களின் பூர்வபுண்ய வீடான 5-ம் வீட்டையும் பார்ப்பதால் வாழ்க்கை நன்றாக இருக்கும். குரு, ஞான காரகனான கேதுவின் 3-ம் பார்வையைப் பெறுவதால், கல்வியில் சிறப்பான நிலையை அடைவீர்கள். வளமான வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*******************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author