நண்பன் – 1 : டேய், இந்த வண்டில ஹெட்லைட்டே இல்லை. கொஞ்சம் மெதுவாவே ஓட்டு!
நண்பன் – 2 : இந்த வண்டில பிரேக் கூடதான் சரி இல்ல. அதுக்கெல்லாம் பாத்தா முடியுமா?
********
விற்பனையாளன் : சார்! இந்த எறும்பு பௌடர், பாக்கெட் பத்து ரூபாதான். வாங்கிக்குங்க சார்!.
நபர் : வேணாம்ப்பா! இன்னிக்குப் பௌடர் வாங்கிக் குடுத்தா, நாளைக்கு அதுங்க வந்து லிப்ஸ்டிக் கேக்கும்.
*******
காவலர் : ஏன் சார், நாம ஸ்டேஷனுக்கு எடுத்துட்டுப் போய் ஒப்படைக்கறதுக்குள்ள இந்த மூணு வெடிகுண்டுல ஏதாவது ஒண்ணு வழியிலேயே வெடிச்சிட்டா என்ன செய்யறது?
தலைமைக் காவலர் : அதனால என்ன, நமக்கு ரெண்டு வெடிகுண்டுதான் கிடைச்சுதுன்னு சொல்லிடலாம்.
********
நபர் : என்ன சார்… உங்க மொபைல திருடிக்கிட்டு ஓடறான், நீங்க சிரிக்கிறீங்க?!
கைப்பேசியின் சொந்தக்காரர் : நீங்க வேற, என் மொபைல்ல சார்ஜ் இல்ல. சார்ஜர் எங்கிட்டே இருக்கு. அது தெரியாம திருடிக்கிட்டு ஓடறானே அதை நெனச்சு சிரிக்கிறேன்.
***********
நண்பர் – 1 : என்னைப் பார்த்தா வெளிநாட்டுக்காரன் மாதிரியா தெரியுது?
நண்பர் – 2 : இல்லியே. ஏன்?
நண்பர் – 1 : போன வாரம் அமெரிக்கா போயிருந்தப்போ, அங்க இருந்த ஒரு பொண்ணு என்னைப் பார்த்து நீ வெளிநாட்டுக்காரனான்னு கேட்டா.