என்னிடம் ஒரு அன்பர், "நீ எப்படி இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறாய்?", என்று கேட்டார். அதற்கு, "இது தான் கடவுளின் ரூபம். கடவுள் என்பவன் ஆனந்த ஸ்வரூபமானவன். அவன் இப்படித் தான் இருப்பான்", என்று கூறினேன்.
நான் ஒரு miniature form of God. நீ என்னைப் பார்த்தால் அவனைப் பார்த்த மாதிரி. கடவுளுடைய ஒரு fraction இத்தனை ஆனந்தமாக இருக்கிறது என்றால் அந்த சிவன் எவ்வளவு ஆனந்த ஸ்வரூபியாக தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பான் என்பதை நீ என்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த நிலையை நீ அடைய வேண்டும். அந்த நிலைகளை அடைய ஒண்ணாமல் உன்னை தடுப்பது உன்னுடைய கர்மா தான். உன்னுடைய கர்மா கழிந்து விட்டால் நீயும் என்னை மாதிரி ஆகி விடுவாய். ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருப்பாய்.
எப்படி ஒரு மீன் ஆனது நீரில் வசித்துக் கொண்டு, நீரை புசித்துக் கொண்டு, நீரை ஸ்வாசித்துக் கொண்டு, நீரில் உறங்கிக் கொண்டிருக்கிறதோ அப்படி நீ ஒரு முக்தனாகி விட்டால் – கட்டுக்களற்ற நிலையை நீ அடைந்து விட்டால் – ஆனந்தத்தை புசிப்பாய், ஆனந்தத்தை பருகுவாய், ஆனந்தத்தில் வாழ்வாய், ஆனந்தத்தில் உறங்குவாய்.
அந்த நிலையை நீ அடைய வேண்டாமா? இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கஷ்டம் என்கிற மாயையில் முழுகிக் கொண்டிருக்கப் போகிறாய்?
“
கர்மா இருக்கும் வரை தொடரும்.
ரொம்ப நல்ல இருக்கு