ஆங்கிலத்தில் உயிரினங்களின் பெயர்கள் பெரும்பாலும் இலத்தீன் மொழியில் அமைந்துள்ளன
பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பெயர்கள் இடத்துக்கு இடம் மாற்றத்துடன் வழங்கி வந்தன. எனவே எவ்விடத்திலும் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அவற்றின் பெயர்கள் அமைந்திருக்க வேண்டியது இன்றியமையாததாயிற்று. ஆகவே அறிவியல் பெயர்களுக்கு இலத்தீன் மொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது; காரணம் அம்மொழி பல நூற்றாண்டுகளாகக் கல்வியாளர்களால் பயன் படுத்தப்பட்டு வந்ததே ஆகும். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பெயர் சூட்டுவதற்கான அறிவியல் முறையை வகுத்து வழங்கியவர் கார்ல் லின்னெயுஸ் (Carl Linnaeus) என்பவராவார்.
அறிவியல் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இதில் ஒரு பகுதி இனப் பெயர் (generic name), அதாவது இனப் பொதுவியல்புகளைக் குறிக்கும் பொதுப்படையான பெயர். அடுத்த பகுதி குறிப்பிட்ட பெயர் (specific name); இப்பெயர் வாழும் உயிரினத்தை மட்டுமே குறிப்பிட்டு வழங்கும் அல்லது அதனைக் கண்டறிந்த அறிஞர் பெயராலும் வழங்கும்.
மனிதருக்கான அறிவியல் பெயர் ஹோமோ சேப்பியன் (Homo sapien) என்பதாகும்; இதன் பொருள் ‘சிந்திக்கும் மனிதர் (thinking man)’ என்பது. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய (fossils) மனிதரை ஹோமோ ஹேபிலிஸ் (Homo habillis) அதாவது ‘கருவியைப் பயன்படுத்தும் மனிதர் (tool-using man)’ என அழைப்பர்.
சார்லஸ் டார்வின் (Charles Darwin)
ஆங்கில அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் அவருடைய பரிணாம வளர்ச்சிக் கருத்துக்களுக்காகவும் (Theory of evolution), பல்லாண்டுகள் அவர் மேற்கொண்ட அவரது ஆய்வுப் பயணத்தின் காரணமாகவும் இன்றும் நினைவு கூறப்படுகிறார். பல சிறு தீவுகளில் தனிச் சிறப்பு வாய்ந்த உயிரினங்கள் (unique creatures) வாழ்ந்து வருவதை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தினார். இவ்வுயிரினங்கள் வேறு பல இடங்களில் வாழ்ந்து வரும் அவற்றோடு தொடர்புடைய பிற உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன எனபதையும் அவர் தெளிவு படுத்தினார். எடுத்துக்காட்டாக, காலபகோஸ் தீவுகளில் (Galapagos islands) தம் தனிமை காரணமாக தனிச் சிறப்புடன் வாழ்ந்து வரும் ஓர் விலங்கினம், வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் அதே விலங்கினத்திடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அவர் கண்டறிந்து விளக்கினார்.
காலபகோஸ் தீவுகளில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இராட்சத ஆமை (giant tortoise) இனம் அவர் கண்டறிந்த விலங்கினங்களுள் ஒன்றாகும். இயற்கைத் தெரிவு (natural selection) பரிணாம வளர்ச்சிக்கு (evolution) எவ்வாறு உதவுகிறது என்பதற்கு ஒட்டகச் சிவிங்கி (giraffe) ஓர் எடுத்துக்காட்டாகும். உணவை அடைவதற்காக அவற்றின் முந்தைய தலைமுறைகளுக்கு மிக நீண்ட கழுத்து இருந்தது என்பது உண்மை.
“