(நன்றி: மின்னஞ்சல்கள்)
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்கள். அதனால் பாவம் ஆண்கள் படும் அவஸ்தைகளைப் பாருங்களேன்!
இளைஞன்: நீண்ட நாள் வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
நண்பன்: திருமணம் செய்துகொள்.
இளைஞன்: திருமணம் அதற்கு உதவி செய்யுமா?
நண்பன்: இல்லை, இந்த மாதிரியான எண்ணங்கள் வாழ்நாளில் உனக்குத் திரும்ப வரவே வராது.
இளைஞன்: காதல் திருமணம் நல்லதா, பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் நல்லதா?
நண்பன்: (கண்ணீர் விட்டு அழுகிறார்)
இளைஞன்: எதற்காக அழுகிறாய்?
நண்பன்: தானே கிணற்றில் விழுவதா அல்லது யாராவது பிடித்துத் தள்ளிக் கிணற்றில் விழுவது நல்லதா என்று கேட்டால் எப்படி அழாமல் இருப்பது???
கணவன்: ஏன் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் இடம் இல்லை?
வக்கீல்: ஒரு குற்றத்திற்காக யாரும் இரண்டு முறை தண்டிக்கப்படுவதில்லை!
திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:
“சுதந்திரதின வாழ்த்துக்கள்!!!”
(இது இருபாலருக்கும் பொருந்துமோ????)
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாகும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா.. இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!!
“
நல்ல நகைச்சுவை.
திருமணம் ஒரு கால்கட்டு; சுதந்திரத்துக்குத் தடை என்பது இருபாலருக்கும் பொருந்தும்தானே!
சிரிக்க மட்டும்” என்ற தலைப்பு சரியான தேர்வு. நல்ல நகைச்சுவை.”
வெர்ய் நிcஎ இ லிகெ இட்
அருமை. முதல் நகைச்சுவை மிகவும் அருமை.
நகைச்சுவை மிகவும் அருமை.