வந்தனம்! வந்தனம் ! என வாசகர்களுக்கு வணக்கம் சொல்வது கொங்கு நாட்டு சிங்கி!
மாயன், ஹேமான்னு புதியவர்கள் அரட்டையில் சேர்ந்திருக்காங்க. அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லி என் அரட்டையை ஆரம்பிக்கிறேன் (அறுவைன்னு சொல்லமாட்டீங்க அப்படிங்கற நம்பிக்கையில..!)
என் போன அரட்டையில ஒரே ஒரு வார்த்தை மறவபாளையம்னு எங்க சொந்த ஊர் பேரைத் தெரியாமா சொல்லித் தொலச்சிட்டேன்! ஆளாளுக்கு பாளையத்தம்மான்னு ஒரு புது பேர் வைச்சிட்டாங்க. இதில ஒரு சுவாராஸ்யமான விஷயம், எங்க ஊர் அம்மன் கோயில் திருவிழாவுக்கு போடும் நாடகத்தில் நாந்தான் அம்மன் வேஷம் போடுவேன். அதில ஒரு போட்டோவை உங்களுக்கெல்லாம் காட்டலாம்னு என் கணினியைத் தேடப்போக, அந்த நேரம் பார்த்து கணினியில் சிக்கல் வந்து ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டியதாப் போச்சு. சரி, அதவிடுங்க! It is all in the game called life. கடைசில அதப் புடிச்சி எடுத்துட்டேன்.
எனக்கு வந்த பதில் கடிதத்தை படிக்கறதுக்கு முன்னாடி, என்னோட பழைய அரட்டையைப் படிச்சிட்டு வந்துடுங்க.
https://www.nilacharal.com/ocms/log/06010915.asp
அதோட ஜோ, ரிஷி, என் கணவர் எழுதிய பின்னூட்டத்தையும் படிச்சு சிரிச்சீங்களா? இதே போல் நீங்க போடும் பின்னூட்டத்தை கீழேயுள்ள சுட்டியில பார்க்கலாம்.
https://www.nilacharal.com/ocms/log/feedbacks.asp
என் கணினிக் கடிதத்துக்கு, என் கொழுந்தனார், நாத்தனார் கூட்டணி அனுப்பிய கடிதம் இதோ :
மதிப்பிற்குரிய வன்பொறியாளரே!
தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றோம். தங்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறோம். காதலன் 5.0 என்பது உல்லாசங்களுக்கான Entertainment Package. Husband 1.0 என்பது operating system.
உங்கள் பிரச்சனைகள் தீர ithoughtyoulovedme.html என்னும் ஆணையைக் கொடுத்து, கண்ணீர் 6.2 என்னும் மென்பொருளை குற்றவுணர்வு 3.4 உடன் தரவிறக்கம் செய்யவும். இந்த மென்பொருள் நன்றாக வேலை செய்தால், நிச்சயம் நகை 2.0 மற்றும் பூக்கள் 3.5 வேலை செய்யும். அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாகுவது போல, மேற்கண்ட புரோகிராம்களை அதிகம் ரன் பண்ணினால் கணவன் 1.0 தானாகவே அமைதி 2.0, ஹேப்பி டே 3.1, பீர் 5.6 போன்றவற்றை ரன் செய்ய ஆரம்பிக்கும்.
நீங்கள் எதைச் செய்தாலும் மாமியார் 9.0ஐ install செய்யக் கூடாது. ஏனெனில் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள Antivirus உங்களின் அதிகார மையங்களை அழிக்க முற்படும். தயவு செய்து காதலன் 5.0ஐ reinstall செய்ய வேண்டாம். அதிலுள்ள கண்காணிப்பற்ற கோப்புகள் கணவன் 1.0வின் கதையை முடித்து விடும்.
கணவன் 1.0 மிக நல்ல மற்றும் குறைவான நினைவாற்றல் உள்ள மென்பொருள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் சற்று தாமதம் ஆகலாம். அதற்காக சமையல் 6.7, காதல் 4.5 போன்ற மென்பொருள்களை பரிந்துரைக்கிறோம்.
அத்துடன், சட்டை எங்கே என்றால் தமிழ் சங்கச் செயலாளரை சமையலறையில் அடைத்துவிட்டீர்கள் என்றும், அவியலில் உப்பு அதிகம் என்றால் மாவட்ட ஆட்சித் தலைவராக வேண்டியவரை மாவாட்ட வைத்துவிட்டதாகவும் இ.பி.கோ. சொல்லி மிரட்டுவதைத் தவிர்ப்பதன் மூலம் குடும்ப அமைதி நிலைக்கும். குடும்பமே உங்கள் கனிவுக்கு தலை வணங்கும்.
இப்படிக்கு,
காதலன், காதலியின் சண்டையில் சந்திக்கு வந்துவிட்ட உடன்பிறப்புக்கள்.
இதே போல் பல சிரிப்பான மின்மடல்கள் அனுப்பும் முறைகள் பற்றி ரிஷி சொல்லியதைப் படிக்க:
https://www.nilacharal.com/ocms/log/11260707.asp
நரேன் எழுதிய காற்றாய் வருவான் தொடர் இந்த வாரத்தோட முடியுது. அடுத்த வாரத்திலிருந்து ரிஷபனின் ‘கிங்.. குவீன்.. ஜாக்’ தொடர் ஆரம்பம். நிலாச்சாரலில் ரிஷபனின் கவிதை, கதைகள் நிறைய வெளியாகியிருக்கின்றன. அதில் ‘மணமகள் அவசரத் தேவை’ தொடரைப் படிக்க:
https://www.nilacharal.com/ocms/log/01280810.asp
ரிஷி பாளையத்தம்மாவின் கதை கேக்க பத்தி சூடத்தோட வருவதாய் சொன்னாரு. அவர் வரதுக்குள்ள நான் அமெரிக்காவின் உல்லாசத் தலமான லாஸ்வேகஸ் மற்றும் நான் இருக்கும் அரிசோனாவின் பனிக் குவளையான பிளாக்ஸ்டப் போயிட்டு வர்றேன்.
மீண்டும் சந்திக்கும் வரை,
அன்பாய் இருங்கள்! ஆரோக்கியமாய் இருங்கள்!
எனக் கூறிப் போய் வருகிறேன்.
“
பாளையத்தம்மனுக்கு புகை எஃபக்ட்லாம் தூளா இருக்கு.
பத்தி, சூடத்தோட ரெடியா இருந்தேன். எனக்கு முன்னாலேயே யாரோ புகை மூட்டத்தைப் போட்டுட்டாங்க போலருக்கு!!
அம்மன்.. தெய்வீக அழகு!!!
அன்புள்ள கவிதா, உங்க நகைச்சுவை நடை நல்லா இருக்கு..வாழ்க,வளர்க!
நீங்க இருப்பது அரிஸோனாவிலா…நான் உங்களுக்கு கொஞ்சம் அருகில் யுட்டாவில் இருக்கேன்..போன வாரம் தான் ஆன்ட்டிலோப் கேன்யன், க்ராண்ட் கேன்யன் எல்லாம் ஒரு ரவுண்டு அடித்தோம்..ட்ரிப்-ஐ என் ஜாய் பண்ணிட்டு வாங்க!
பி.கு. நானும் கோவை மாவட்டம் தான்.. 🙂
தல ஜோ,
புகை மட்டுமில்ல, வேப்பிலையோட ஒரு கூட்டமே அம்மன் பாட்டுக்கு ஆடுவாங்க.அந்த போட்டோவெல்லாம் போட்டு வாசகர்களை பயப்படுத்த வேண்டாம்னு போடலை.
ரிஷியின் ஜோதிட கணிப்பு:
கோவை மாவட்ட நேயர்களே! ராகு கீழிருந்து மேலும், கேது மேலிருந்து கீழும் கண்டபடி பார்வையைச் செலுத்துவதால், இந்த வாரம் பள்ளத்தாக்குகளில் பதுங்கி குதூகலிப்பீர்கள்! கொடுத்து வைத்த அமெரிக்க ஆத்மாக்கள்!!
அன்பு நண்பர் ரிஷி,உங்க கணிப்பு மகிழ்ச்சி தருகிறது..ஆனால் உங்க காதுகளிலிருந்து வரும் புகை மண்டலம்தான் கண்ணைக் கசக்க வைக்கிறது!! 🙂
மஹி,
நண்பர்கள் மகிழ்ச்சி கண்டு எமக்கும் மகிழ்ச்சியே. இருந்தாலும் என்ன செய்வது! காதுக்குள் இருக்கும் எரிமலை அவ்வப்போது வெடித்து விடுகிறது 🙂
வணக்கம் மகி,
அரிசோனா மீண்டும் வருவதாய் இருந்தால் கூறுங்கள். சந்திப்போம்.
ஜோதிட மனோன்மணி,
தங்கள் கணிப்புக்கு நன்றி. நண்பர்கள் நலமாய் இருக்கிறார்கள் என மகிழ்ந்தால் மனம் போல் மனைவி அமைவார். பொய்யான கணிப்புச் சொன்னால் அதற்கான பலனை பாளையத்தம்மன் கொடுத்தே தீருவார்.