Q. பாபா நீங்கள் இவ்வளவு powerful ஆக இருக்கிறீர்கள். திறமைசாலியாக இருக்கிறீர்கள். ஆனால் எப்படி உங்களால் இவ்வளவு polite ஆகவும், simple ஆகவும், அமைதியாகவும் இருக்க முடிகிறது?
‘நம்முடைய மூளை, நம்முடைய work என்று நாம் நினைத்தால்தான் திமிர் வரும். எப்பொழுதும் நம்மை எல்லாம் ஆட்டுவிக்கும் ஒரு பெரிய சக்தி இருக்கிறது; அதுதான் நம்முடைய வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்று புரிந்து விட்டதோ, அப்புறம் நமக்கு திமிர் வருவதற்கு என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை once you understand it is not you the body, It is the Spirit within you. உனக்குள்ளே இருக்கும் ஒளிதான் உன்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அது நினைத்ததால்தான் நீ ஆன்மீகத்திற்கு வந்தாய். அது நினைத்ததால்தான் இவ்வளவு ஆயிரம் பேர் உன்னை நம்புகிறார்கள். அது நினைத்ததால் தான் நீ தனியாக இருந்தாலும், lonely யாக feel பண்ணவில்லை. அது நினைத்ததால்தான், நல்ல நல்ல dress எல்லாம் போட்டுக் கொண்டு ஜாலியாக சுற்ற முடிகிறது. அது நினைக்கிறதனால்தான் இவ்வளவு பெரிய institution வந்தது. அது நினைத்ததனால்தான் இவ்வளவு பேர் உன்னை love பண்ணுகிறார்கள். இவ்வளவு பேரிடம் உன்னால் interact பண்ண முடிகிறது. Right trackல் guide பண்ண முடிகிறது இது எல்லாம் என்றைக்குப் புரிகிறதோ அப்பொழுது நமக்குத் தெரிந்து விடும். "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே". ஒரு பம்பரம் இருக்கிறது. அந்த பம்பரத்தில் என்ன இருக்கிறது? அதை ஆட்டுவிக்கும் கை இருக்கிறது. அந்த மாதிரி நாம் கடவுள் கையில் இருக்கும் பம்பரம். அவன் ஆட்டுவிப்பது மாதிரி நாம் செய்கிறோம்.
அதனால் இந்த உலகத்தில் நாம் எல்லாமே physical body என்று நினைத்தால் குழப்பம் வரும். நாம் ஒரு Spiritual Being என்று நினைத்து விட்டால் எந்த குழப்பமும் வராது. எந்த காலத்திலும் வராது. Siva Shankar Baba போன்றவர்கள் simple ஆக இருப்பதற்கு, இதுதான் காரணம். We know that we are limited and the spirit within us is limitles. நாங்கள் physical body யில் limitation உள்ளவர்கள். எங்களுக்கு உள்ளே இருக்கும் ஒளி limitless. இதைத் தெரிந்து கொண்டதால் திமிர் வருவதில்லை. நான் மட்டும் இல்லை. எல்லா உண்மையான மகான்களுமே இப்படித்தான் இருப்பார்கள்.
“