ஜோதிடம் கேளுங்கள்

நான் அமாவாசையில் பிறந்துள்ளேன். இதுவரை வெற்றி என்பது என்வாழ்வில் இல்லை. இனி மாற்றம் வருமா? –
காயத்ரி, தூத்துக்குடி

அன்பு நிலாச்சாரல் வாசகி காயத்ரி அவர்களே !

35 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் கும்பம். தாங்கள் கொடுத்த தேதிப்படி தாங்கள் பிறந்துள்ள திதி துவாதசி திதியாகும். ஆதலால் தாங்கள் அமாவாசை திதியில் பிறக்கவில்லை . மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். நல்ல மன தைரியம் உடைய தங்களின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளன. ஆக்கப்பூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தங்களின் வாழ்க்கை வளமாக அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***********


எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? என் காதல் வெற்றி பெற்று காதல் திருமணம் நடக்குமா அல்லது வீட்டில் பார்க்கும் வரன் அமையுமா? புகுந்த வீடு நன்றாக இருக்குமா? நான் வீட்டிற்கு மூத்த பெண். என் திருமணத்திற்கு நான் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்? – சசிகலா, கோயம்புத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி சசிகலா அவர்களே !

25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம், லக்னம் கும்பம். தங்களின் ஜாதகத்தில் குரு 11-ம் வீட்டில் உள்ளதால் தங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். மேலும் லக்னத்திலிருந்து 7-ம் வீட்டில் இருக்கும் சுக்ரன், புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்களும் குருவின் பார்வை பெறுவதால், பெற்றோர் பார்த்து வைக்கும் வரன் மூலம் நடைபெறும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தாங்கள் மணமாகிச் செல்லும் இடமும் நல்ல வளமான நிலையில் இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடிவிடும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***********

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author