ருத்ரனாக வாழ்ந்த ஆர்யா
‘நான் கடவுள்’ படத்தில் ஆர்யா, ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். "’நான் கடவுளி’ல் ருத்ரன் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளேன். அவ்வாறு நடிப்பது மிகவும் கடினமாகவும், சவாலாகவும் இருந்தது" என்று கூறியுள்ளார் ஆர்யா. மேலும் டைரக்டர் பாலா அனைத்து விதங்களிலும் பிரமிக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.
சாயாசிங்கின் ஆசை
"நான் இந்த சினிமா துறைக்கு வந்து 6 வருடங்களாகின்றன. இங்கு வந்த பிறகு நான் நிறைய கற்றுக்கொண்டேன். நல்ல கதையாக இருக்குமானால் கண்டிப்பாக நான் டைரக்ட் செய்வேன்" என்று கூறி தன்னுடைய டைரக்டராகும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் நடித்த ‘வல்லமை தாராயோ’வின் வெளியீட்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
டப்பிங் பேசும் சின்மயி
டைரக்டர் கண்ணன் இயக்கும் ‘ஜெயம் கொண்டானி’ல் வினய், பாவனா, லேகா வாஷிங்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். வினய்யின் தங்கையாக நடிக்கும் லேகா வாஷிங்டனுக்காக டப்பிங் பேச வருகிறார் பாடகி சின்மயி. ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் தனிஷாவிற்காக சின்மயி டப்பிங் பேசியதைக் கேட்ட பிறகு லேகாவிற்கு இவர் குரல் சரியாக பொருந்தும் என்று தீர்மானித்துள்ளார் இயக்குனர்.
மியூசிக் டைரக்டர்களாகும் ‘கலோனியல் பிரதர்ஸ்’
ஆல்பம் வெளியீடுகளில் பிரபலமான ‘கலோனியல் பிரதர்ஸ்’ இசையமைக்கவிருக்கும் முதல் திரைப்படம் சரணின் ‘மோதி விளையாடு’. இதில் வினய், காஜல் அகர்வால் நடிக்கவுள்ளனர். கொடைக்கானலில் இப்படத்தின் பாடல் பதிவு நடைபெறுகிறது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய் மற்றும் பிரிட்டன்ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது
1000 பிரதிகளுடன் வெளியானது தசாவதாரம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 1000 பிரதிகளுடன் ஜூன் 13ஆம் வெளியானது ‘தசாவதாரம்’. இப்படத்தில் வரும் வெள்ளை மாளிகை செட்டை தோட்டா தரணி அமைத்திருக்கிறார். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு கோயில் படத்தின் ஹைலைட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல்களை வெளிக்கொண்டுவரும் ‘குடியரசு’
தேசிய கிக் பாக்சிங் சாம்பியன் சபீர் ஹூஸைன் இயக்க சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சத்யா (இரு கிக் பாக்ஸ் வீரர்கள்) தயாரிக்கும் படம் குடியரசு. "சமுதாயத்தில் மிகவும் பிரபலமானவரின் ஊழல்களை பத்திரிக்கையாளர் ஒருவர் 24 மணி நேரத்தில் வெளிக்கொணர்வதே படத்தின் கதை. அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் ஊழல்களை வெளிக்கொணர்ந்தனர் இரு பத்திரிக்கையாளர்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது இப்படம்" என்று கூறியிருக்கிறார் இயக்குனர்.
நெப்போலியனின் ஐடி கல்விக்கூடம்
தகுதியுள்ள சிறந்த மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஜீவன் ஐடி அகெடமியை ஆரம்பித்துள்ளார் நெப்போலியன். இதன் பயிற்சி காலம் மூன்று மாதம். பயிற்சியின் ஒவ்வெரு நாளும் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்து மெருகேற்றி மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தருவதே இந்த கல்விக்கூடத்தின் குறிக்கோள்.
2006ஆம் வருடத்தின் சிறந்த சின்னத்திரை தொடர் கதைக்கான முதல் பரிசை வென்றுள்ள ‘செல்வி’க்கு விருது, சான்றிதழுடன் ரூபாய் 2 லட்சத்திற்காக காசோலையும் வழங்கப்படுகிறது. ஏவிஎம்மின் ‘சொர்க்கம்’ தொடர்கதை இரண்டாவது பரிசையும், ‘கல்கி’யில் நடித்த குஷ்பு சிறந்த நடிகையாகவும், விகடன் டெலி விஸ்டாஸ் வழங்கிய ‘அல்லி ராஜ்யம்’ சிறந்த வாராந்திர தொடர்கதையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் விருது, சான்றிதழுடன், ரூபாய் ஓரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது.
“