தேவையான பொருட்கள்:
சிக்கன் ப்ரெஸ்ட் பீஸ் – 200 கிராம்
பாஸ்தா (மக்ரூனி) – 200 கிராம்
எண்ணை – 2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
அஜினோமொட்டொ – சிறிதளவு (அ) சூப் ஸ்டாக் – 1
சோய் சாஸ் – 1 டீஸ்பூன்
பெப்பர் – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை:
சிக்கனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்துக்கொள்ளவும். பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு வெங்காயம், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். அஜினொமோட்டோ அல்லது விருப்பப்பட்டால் சூப் ஸ்டாக் சேர்க்கலாம். சிக்கனையும் அதோடு போட்டு வதக்கவும். பின்பு வேகவைத்த மக்ரூனி சேர்க்கவும். தேவைக்கு சோய் சாஸ், உப்பு, பெப்பர் சேர்க்கவும். சுவையான சிக்கன் மக்ரூனி (பாஸ்தா) ரெடி.
“