20. ஆடும் திரைச்சீலை
ஜன்னல் கதவுகள்
பறக்கும் காகிதங்கள்
தலை முடி
உருளும் பாத்திரங்கள்
வரவேற்கத் தயாராய்..
மனிதன் மட்டும்
புழுதி என்று
அவசரமாய்
கதவடைத்து..
21. தினந்தோறும்
சந்தித்து விடுவதாலோ
என்னவோ
காற்றின் மீது
நம் கவனம் இல்லை.
ஆனாலும் வீசுகிறது தினமும்
நம்மைக் கடந்தும்
உரசிக் கொண்டும்
அதற்கும்
வேண்டியிருக்கிறது
நம் சந்திப்பு!
22. கவன ஈர்ப்புத் தீர்மானமாய்
காற்றின் வேகம்
சூறாவளிகளை
வேறு எப்படிச் சொல்வது?
குடியிருப்புகளைப்
புரட்டிப் போட்டும்
அடங்காமல் திமிறுகிறது..
கடலுக்குள் நுழைந்தும்
தணியவில்லை..
பறித்த உயிர்களின்
மூச்சுக் காற்றை
ஜீரணிக்க முடிகிறதா அதனால்?
வளமான கற்பனை.! பாராட்டுக்கள்.!
காற்று மட்டுமே காசு கொடுக்காமல் கிடைக்கிறது.தென்றலாய்ப்,புயலாய்,சூறாவளியாய் வாடையாய் வந்து செல்லும் காற்றை கற்பனையாய்க் கொடுத்தமைக்கு நன்றி