மாற்றம்

‘நாளை உனது கடைசி நாள் ..’ என்று

யாரோ ஒருவர்

என் தலை வருடி

சொல்லிப் போனார்..

கனவு பொய்யோ நிஜமோ

இன்றொரு நாள்

‘இப்படித்தான் இருக்கலாமே ‘

என்று யோசித்தேன்.

எதுவும் நிகழாமல்

மீண்டும் விழித்தபோது

உள்ளே குரல் கேட்டது..

‘இப்படியே இருந்து விடலாமே’
—–

About The Author