கவின் குறு நூறு-8(22,23)

22

என்னைப் பார்க்க வந்த இளம் பேராசிரியர்
வில்லாளனையும் தாத்தா என்றான் கவின்;
மாமா என்று மாற்றிச்
சொல்லச் சொன்னேன்
சொன்னான்;
வயதானவராக்கிய வருத்தம்
சற்றே தணிந்தது அவருக்கு;
என்ன நினைத்தானோ கவின்
மாமா என்று சொன்ன மறு நொடியில்
அவரைப் பாப்பா என்றான்.
இனி இங்கிருந்தால் என்னை இவன்
தொட்டிலில் போட்டுவிடுவான் என்று
சொல்லிப் புறப்பட்டார் வில்லாளன்.

23

கண்ணாடியைப் பார்த்து பல்விளக்கிக்
கொண்டிருந்த பாட்டியிடம்
கவின் சொன்னான்;
கண்ணாடியைப் பார்த்துக்
‘கண்ணை விளக்குங்க பாட்டி!’

About The Author

1 Comment

  1. P.K.sankar

    ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு கவிதைகள்
    ஏதோ பத்தொடு பதினொன்று என்று இல்லாமல் ,
    சத்தொடு விளங்கும் முத்தான கவிதைகள்.

Comments are closed.