ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய நேரம் எவ்வாறு உள்ளது? சிறிய தொழில் தொடங்கினாலும் எப்பொழுதும் மிகுந்த தடைகள் வருகின்றது? இன்று வரையில் என் நண்பர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள். ஏன்? – ஜி.டி. பிரபாகரன், திருக்கோவிலூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் பிரபாகரன் அவர்களே !

45 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் மேஷம். குரு பகவான் மே மாதம் தங்கள் ராசியிலிருந்து 5-ம் இடத்திற்கு மாறுகிறார். மே 2011 முதல் வளமான காலம் துவங்குகிறது. தங்களின் ஜாதகத்தில் சனி 11-ல் இருந்து கொண்டு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், காரியங்கள் தாமதமாகவும், தடைபட்டும் நிகழ்கின்றன. தடைகள் அகன்று காரியங்களில் வெற்றி பெற தினமும் விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும். நண்பர்கள் அனைவரையும் நம்புவதைத் தவிர்க்கவும். நண்பர்கள் தங்களை ஏமாற்றுகின்றனர் என்று தெரிந்தபின் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

**********

எனக்கு வயது 26. நட்சத்திரம் மகம். ராசி சிம்மம். மிருகசீர்ஷம் நட்சத்திரம் கொண்டவரைத் திருமணம் செய்து கொள்ளலாமா? – மாலதி, ஈரோடு.

அன்பு நிலாச்சாரல் வாசகி மாலதி அவர்களே !

சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் மிருகசீர்ஷம் நட்சத்திரம் கொண்டவரைத் திருமணம் செய்து கொள்ளலாம். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

**********

பதில்களை வழங்கியவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A., சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author