வெள்ளி
"மக்கள் உங்கள் ஆட்சியில் நலமாக உள்ளார்கள் மகாராணியாரே!" என்று மந்திரி கூறவும், அந்த சிப்பாய் வந்து அச்செய்தியைச் சொல்லவும் ஒரு நிமிட இடைவெளிதான்.
அந்தச் செய்தி, "இரண்டாவது தெரு வழியாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தானியக்கிடங்கு மூழ்கி விட்டது. மக்கள் தத்தளிக்கிறார்கள். கரையை அடைக்க முடியவில்லை..!"
மகாராணி செய்வதறியாது, "கடவுளே! என் மக்களை காப்பாற்று!"என்று கதறிக்கொண்டு வெளியே வரவே, வெள்ளநீர் அவளையும் அடித்துச் சென்றது.
இது எதுவுமே அறியாமல், ‘வெள்ளிக்கிழமையானா குளி குளின்னு உயிரை வாங்குறாளே அம்மா..’ என்று திட்டிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தான் குமார்.
பாத்ரூம் ஓரமாய் இருக்கும் எறும்பு புற்றுக்குள் தண்ணீர் செல்வது அவனுக்குத் தெரியவா போகிறது!!
“
ரொம்ப நல்லா இருன்தது.