மூன்று பேர் வழி தவறி சோற்றுக்கு இல்லாமல் அலைந்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டிலே இருக்கிறவங்க அவங்களை, "வாங்க, இன்னிக்கு எங்க வீட்டிலே தங்கிக் கொள்ளுங்கள். உங்க 3 பேரிலே யாருக்கு ரொம்ப சூப்பரான கனவு வருதோ அவங்களுக்கு நான் பானையிலே வைத்திருக்கிற சாப்பாடு தருகிறேன்" என்று சொன்னாள். மூன்று பேரும் தூங்கிவிட்டார்கள். மறுநாள் காலையிலே அந்த வீட்டு அம்மா அவர்களைக் கூப்பிட்டார்கள், "இப்போ சொல்லுங்க, உங்களுக்கு என்ன கனவு வந்ததுன்னு?" ஒரு ஆள் சொன்னான், "நான் இந்த நாட்டுக்கே ராஜாவாகிற மாதிரி கனவு வந்துச்சு". இரண்டாவது ஆள், "நான் கடவுளாகவே ஆகிவிட்டதாக எனக்கு கனவு வந்தது"ன்னு சொன்னான். மூணாவது ஆள், "காலை வரைக்கும் எதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து ராத்திரியே பானையிலே இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டேன். ஏன்னா, நான் கனவு கண்டாலும் அதற்குப் பிறகு இதுதானே கிடைக்கப் போகிறது. அதனாலே நானே போய் சூடாக சாப்பிட்டுவிட்டேன்" என்று சொன்னான்.
சிவசங்கர் பாபா மூன்றாவது category. ரொம்ப practical ஆன ஆள். கனவு காண்பது இல்லை. நான் ராஜாவாகவும் கனவு காண்பதில்லை. கடவுளாகவும் கனவு காண்பதில்லை. Practicalஆக சூடாக இருக்கிற சாப்பாட்டை சாப்பிட வேண்டியதுதான். நான் கரையைத் தொட்டவன். Practicalஆன person. ஒவ்வொரு நிமிஷத்தையும் சுவாசிக்க ஆசைப்படுகிறவன். எனக்கு Utopian dreamsலேயும், தெரியாத மோட்சத்தைப் பற்றியும் தெரியாதவர்களிடத்தில் தெரிந்த மாதிரி புலம்பிக் கொண்டு இருப்பதெல்லாம் எனக்கு பிடித்தமான விஷயங்கள் அல்ல. . I don’t want to confuse anyone in the name of religion also.. நமக்கு வேண்டியதெல்லாம் என்ன, இந்த நிமிஷம்தான் நிஜமான வாழ்க்கை. அடுத்த நிமிஷம் இருப்போமா, இல்லையா என்று யாருக்குத் தெரியும்?
ஒவ்வொரு நிமிஷத்தையும் practical ஆக வாழக் கற்றுக் கொள் என்பதுதான் என்னுடைய மெஸேஜ். அதனாலே என்னை நீங்க பார்த்தீங்கன்னா, I will be bubbling with energy.. ஒரு செகண்டாவது நீ என்னை சும்மா பார்த்திருக்கியா? I will always be doing something. I will express my love in some way or the other by sharing whatever I have that moment, making people understand that I care for them, at the same time not giving room for anger or hatred.. ஒவ்வொரு நிமிஷத்திலும், ஒவ்வொரு சுவாசத்தையும் நான் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறேன். இதுதான் என் lifeஉடைய message
“