நான் சுகாதாரத் துறையில் பணிபுரிகிறேன். ஆனால், கணினியினால் அலுவலகப் பணியிலேயே காலம் ஓடுகிறது. தேவையில்லாத அவஸ்தை மற்றும் குடைச்சல், அதிகாரிகளின் அன்புத் தொல்லை வேறு. எனக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்? – கதிரவன், திருவண்ணாமலை.
அன்பு நிலாச்சாரல் வாசகர் கதிரவன் அவர்களே!
43 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் மீனம் ஆகும். தங்களின் ஜாதகப்படி ராசி மற்றும் லக்ன அதிபதியாகத் திகழ்பவர் குரு பகவான். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை தரிசித்து வரவும். தங்களின் ராசியிலிருந்து 9-ம் இடத்திற்கு டிசம்பர் மாதம் குரு மாறுகிறார். இதற்குப் பிறகு தங்களின் விடிவு காலம் துவங்குவதால், தொல்லைகள் தானே குறைந்து விடும். பணி புரியும் இடம் அமைதியாக மாற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? – சி.கலையரசி, கோயம்புத்தூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகி கலையரசி அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி மகரம், லக்னம் தனுசு ஆகும். தங்களின் ஜாதகப்படி 08.04.2010 வரை குரு திசை புதன் புத்தி நடைபெறுகிறது. இந்தக் கால கட்டத்திற்குள் தங்களுக்கு திருமணம் கை கூடி விடும். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எனக்கு 38 வயது ஆகிறது. எவ்வளவு பணம் வந்தாலும் பணம் கையில் தங்குவதே இல்லை? எனக்கு நல்வாழ்வு எப்போது தொடங்கும்? – என்.ஜோசப் ஜெய்வின் தாஸ், வடக்கன்குளம்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் ஜோசப் ஜெய்வின் தாஸ் அவர்களே!
38 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை, ராசி விருச்சிகம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் சுக்ரன் 9-ல் நிற்பதால், சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள பெண்மணியிடம்- அன்னை அல்லது மனைவி யாரிடமாவது கொடுப்பதோடு, வரவு, செலவு ஆகியவற்றையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டால், பணம் தங்கும். தங்களின் லக்னத்திலிருந்து 5-ம் வீட்டிற்கு குரு பகவான் டிசம்பர் 15 முதல் செல்கிறார். இந்தக் காலம் முதல் தங்களுக்கு நல்ல காலம் துவங்குகிறது. வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“