உற்ற துணை……
திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,
கடவுள்தான் உனக்கு நண்பனாக இருக்க வேண்டும். மனிதனை நம்பாதே, பழகலாம் பேசலாம் எல்லாம் சரி. ஆனால் அதற்கெல்லாம் மேலே கடவுள்தான் உனக்கு உற்ற துணையாக, நண்பனாக இருப்பான். வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் உனக்கு வந்திருந்தால் எல்லாம் பொய் என்று உனக்கு தெரிந்திருக்கும். அப்படி ஆனால்தான் ஞானி ஆக முடியும். சும்மா உலக வழக்கில் ஞானியாக மாட்டாய். அடிபட்டு, மிதிபட்டு நீ இந்த உலகத்தின் மேல் வைத்திருக்கும் பிடிப்புகள் எல்லாம் போக வேண்டும்.
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி மெய்ஞானம் தனை மிளிர்விக்கும் மெய்யறிவே, மெய்ஞானம் எப்போது வரும்? பொய்யானது எல்லாம் போக வேண்டும். சுத்தம் எப்போது வரும்? குப்பை எல்லாம் போக வேண்டும். வெளிச்சம் எப்போது வரும்? இருட்டு எல்லாம் போக வேண்டும். அப்போது அஞ்ஞானம் போனால் தான் ஞானம் வரும். ஞானியாவது என்பது விளையாட்டு அல்ல.
ஞானி ஞானி என்று சொன்ன பேய்கள் கோடி கோடியே-திருமூலர். உலகத்தில் ஞானி என்று சொல்லிக் கொள்கிறவன் கோடிக்கணக்கில் இருக்கிறானாம். ஒரு உண்மையான ஞானி என்பது விளையாட்டு கிடையாது. அவ்வளவு அடிபட்டு மிதிபட்டு வரணும். சும்மா புத்தகம் படிச்சுட்டு நான் சாமியானேன் என்றால் ஞானியல்ல. உண்மையில் அதை வாழ்க்கையில் அனுபவத்தில் கற்கனும்.
“