வணக்கம் நண்பர்களே! வாழ்க வளமுடன்! இந்த அரட்டைகளின் மூலமா நாலு விஷயங்களை உங்களோடப் பகிர்ந்துக்கிறது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.
இந்தக் காலத்தில வீட்டுக்கு ஒண்ணு, ரெண்டு பிள்ளைங்கதான். அவங்களும் இடம், சொத்துன்னு எல்லாத்துக்கும் அடிச்சுக்கறாங்க. ஆக, வீட்டில் ஆரம்பிக்கும் இடத் தகராறு தெரு, ஊர், உலகம் எனப் பரந்து விரிந்து வியாபித்திருப்பது அவலமானதுதான். எல்லைக் கோடுகள் வகுத்தும் அத்துமீறி உள்ளே நுழைந்து தட்டிப் பறிக்க நினைக்கும் கொடுமை. இது இன்று நேற்று தொடங்கியதில்லை. தனது எல்லைகளை விரிவாக்குவதில் மனிதனுக்கிருக்கும் பேராசை காலகாலமாய்த் தொடர்ந்திருக்கிறது. இந்த எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்றுதான் தெரியவில்லை.
நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘ஐஸ் ஏஜ்’ (Ice Age) என்றொரு காலம் இருந்தது. ஐஸ் ஏஜ் காலம் மாறி பனி உருகத் தொடங்கியபிறகு, தண்ணீர் இடையில் புகுந்து நிலப்பரப்புகள் நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக அமைந்திருக்கின்றன. இதுபோல் எத்தனை நிலப்பரப்புகள் எங்கெங்கே இடம் பெயருமோ தெரியாது. இவ்வாறிருக்க இந்த எல்லைச் சண்டைகள் தேவையா?
இன்று உலகம் வெப்பமயமானதால் ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகள் எல்லாம் உருகத் தொடங்கியிருக்கின்றன. சமீப காலமா நியூசிலாந்து கடற்கரைப் பகுதியை நோக்கி நூத்துக்கும் மேற்பட்ட பெரிய பெரிய ஐஸ் கட்டிகள் மிதந்து வந்துக்கிட்டு இருக்காம். கப்பல்கள் போய்ட்டு வரதுக்கு நிறைய எச்சரிக்கைகளை அறிவிச்சிருக்கு நியூசிலாந்து அரசு.
ஆக, எதைத் தெரிஞ்சிக்கிறோமோ இல்லையோ, ரிஷி சொன்ன மாதிரி எல்லாரும் நீச்சல் கத்துக்கணும். என்ன சொல்றீங்க?
https://www.nilacharal.com/ocms/log/10120919.asp
உணவே நோய்!
ஆம், உணவே மருந்துன்னு சித்தர்கள் சொன்ன வாக்கை இப்ப உள்ள கலாசாரம் இப்படி மாத்திடுச்சு. ஆரோக்கியமான உடலுக்கு ஆதாரமாக, நல்ல சத்தான உணவு வகைகளை சரியான கால இடைவெளில சாப்பிடணும்.
காலையில் 7- 8 ஒரு ராஜா வீட்டுச் சாப்பாடு போல (நல்ல வெரைட்டீஸ்) முழு வயிறு சாப்பிடணும். மதியம் 12-1 முக்கால் வயிறு சாப்பிட வேண்டும். இரவு 7-8 அரை வயிறு சாப்பிட வேண்டும். (நம்ம தாத்தா பாட்டி காலத்தில ஏன் 7 மணிக்கு சாப்பிட்டாங்கன்னு இப்பப் புரியுது!) சாப்பிட்ட உணவில் இருக்கிற நச்சுத்தன்மை, தேவையற்றவை ஆகியவற்றைப் போக்க உடற்பயிற்சி செய்யணும். இப்ப இதுக்கெல்லாம் டைமே இல்லை. அதுவும் உணவுத் திட்டமும் தலைகீழ்.
காலையில ஏதோ ஒன்றைக் கொறிக்க வேண்டியது (முக்கியமாக ஒரு பிரட் சாண்ட்விச் அதோட கோக் இல்லைன்னா.. பெப்ஸி!) மதியம் ஏதோ சாப்பாடு. இல்லைன்னா பீட்ஸா! இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் சாப்பாடு. விடுமுறை நாளென்றால் கேக்கவே வேண்டாம். இதனால் சிறு வயதிலேயே பலதரப்பட்ட நோய்களும் வந்து விடுகின்றன. வெளியில் காற்றோட்டமாக விளையாடச் செல்வதும் இல்லை. முக்கியமாக, நம் குழந்தைகள் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.
பள்ளிக்கு இட்லி எடுத்துக் கொண்டு போகச் சொன்னால் முகத்தைச் சுழித்து அதை அருவருப்பாகப் பார்க்கிறார்கள். இப்போதுள்ள குழந்தைகளுக்கு பாக்கெட் சிப்ஸ், கோக், நூடுல்ஸ், பெப்ஸி, பபிள்கம் இவைதான் மிகவும் பிடிக்கிறது. இவை உடலுக்குக் கேடு என்று தெரிந்து கொண்டே அதை வாங்கிக் கொடுக்கிறோம். குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள். நம் சோம்பேறித்தனத்திற்கும், நாகரீகத்தை வெளிக்காட்டுவதற்கும் (இட்லி தோசை சாப்பிட்டா உங்களை யாரும் பட்டிக்காடுன்னு சொல்லமாட்டாங்க!) நம் இளம் குருத்துக்களை பலியாக்க வேண்டாமே! முயற்சி பண்ணிப் பாருங்க! இளைய தலைமுறையின் ஆரோக்கியம் பெத்தவங்க கிட்டதான் இருக்கு!
எப்போதும் விழிப்போட இருக்கணும்ன்னு சொல்வாங்க இல்லையா, அதுக்கு எடுத்துக்காட்டா ஒரு சம்பவம் நடந்திருக்கு. எல்லா இடங்களிலும் இப்போது லிப்ட் வந்தாச்சு. லிப்ட்டுக்குள்ள ஏறும்போது லிப்ட் இருக்கா இல்லையான்னு தயவுசெய்து பாத்துட்டு ஏறுங்க. இது என்ன புதுசா இருக்குன்னு கேக்கறீங்களா?
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் ஒன்பது மாடிக் கட்டிடம் ஒன்றில் லிப்டில் ஏறிய பெண்மணி இறந்து போனார். எப்படி? அவர் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே இறங்க லிப்டை ஆன் செய்தார். கதவு மட்டும் திறந்தது. ஆனால் உள்ளே லிப்ட் இல்லை. உள்ளே காலை வைத்தவர் கதை அதோடு முடிந்தது. அந்தக் கட்டிடத்தைப் பராமரிக்கும் இஞ்சினியரைக் கைது செய்துள்ளார்கள். ஒருவருடைய அலட்சியம் மற்றொருவருடைய உயிரையே எடுத்துவிட்டது.
ஒரு சூப்பர் மேட்டரைச் சொல்லிட்டு நம்ம அரட்டைய முடிச்சுக்குவோம். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்ன்னு நம்ம தேசிய கவி பாடினாரு. அது எவ்வளவு பெரிய உண்மை! நமக்கெல்லாம் எண்ணிக்கைல மில்லியன் தெரியும். (அதான் அரசியல்வாதிங்க அடிக்கடி ஊழல் பண்ற தொகை ஆச்சே! தெரியாம இருக்குமா?) அதுக்கு மேல டிரில்லியன், அதுக்கு மேல ஸில்லியன் (யாரோ விஜய் ரசிகர்கள் போல இருக்கு – கில்லியன் சொல்றாங்க, பரவாயில்லை விடுங்க.. ஏதோ ஒண்ணு!) அதுக்கும் மேல என்ன வரும்?? யாருக்குமே பேர் தெரியாது. ஆனா நம்ம தமிழ் மொழில எல்லாத்துக்கும் பேர் இருக்கு. படிச்சுப் பாருங்க…
1 = ஒன்று (one)
10 = பத்து (ten)
100 = நூறு (hundred)
1000 = ஆயிரம் (thousand)
10000 = பத்தாயிரம் (ten thousand)
100000 = நூறாயிரம் (hundred thousand)
1000000 = பத்து நூறாயிரம் (one million)
10000000 = கோடி (ten million)
100000000 = அற்புதம் (hundred million)
1000000000 = நிகற்புதம் (one billion)
10000000000 = கும்பம் (ten billion)
100000000000 = கணம் (hundred billion)
1000000000000 = கற்பம் (one trillion)
10000000000000 = நிகற்பம் (ten trillion)
100000000000000 = பதுமம் (hundred trillion)
1000000000000000 = சங்கம் (one zillion)
10000000000000000 = வெல்லம் (ten zillion)
100000000000000000 = அன்னியம் (hundred zillion)
1000000000000000000 = அர்த்தம் (யாருக்குத் தெரியும்!!)
10000000000000000000 = பரார்த்தம் (அம்மாடியோவ்!!)
100000000000000000000 = பூரியம் (ஆத்தாடியோவ்!!! )
1000000000000000000000 = முக்கோடி – ???????????
10000000000000000000000 = மஹாயுகம் – ?????????????????
எப்பூடி!
மீண்டும் சந்திக்கும் வரை, நலமா இருங்க. மகிழ்ச்சியா இருங்க! வாழ்த்துக்கள்!
“
இந்த எண் பெயர்களை எங்கிருந்து புடிச்சீங்க தேவி?
10000000000000000 = வெல்லம் அல்ல வெள்ளம்.
மிக அருமையன தகவல். தமிழ் வளர்ப்போம்.
ஒன்று……..மஹாயுகம்” ஸ்..இப்பவே கண்ணக்கட்டுதே!.”
ஒரு நல்ல தகவல்…. கணக்குல புலியா இருப்பிங்க போல……….
வாங்க கோமதி! எல்லாம் நம்ம இணையதளத்தில் இருந்துதான்!
வருகைக்கு நன்றி திரு. முத்துகிருஷ்ணன். மொழிமாற்றத்தில் எழுத்தில் பிழை வந்துவிட்டது. மன்னிக்கவும்.
நன்றி திரு. மாலிக் நன்றி திரு.பாத்திமா
தேவி,
பாத்திமா சொல்றமாதிரி நீங்க கணக்குல புலின்னா இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம். ஒரு மஹாயுகத்தையும், இன்னொரு மஹாயுகத்தையும் பெருக்கி வர்ற தொகையில எத்தனை அன்னியமும், பரார்த்தமும், நிகற்பமும் இருக்கு சொல்லுங்க.