சில்லுனு ஒரு அரட்டை

அன்புடையீர்

வணக்கம். எவ்வாறு இருக்கிறீர்கள்? நலமா? ஊரில் விவசாயமெல்லாம் நன்றாக நடக்கிறதுதானே. இன்று நாம் பேசப் போவது என்னவென்றால்….

இப்படில்லாம் பேசி நல்ல பிள்ளையா கொஞ்சம் நல்ல பேர் வாங்கலாம்னு பார்த்தேன். சும்மா பேச்சுக்கு, ‘பாட்டைக் கண்டுபிடிச்சீங்கன்னா உங்களையும் அரட்டையில் சேர்த்துக்குவோம்’னு சொன்னது வம்பாப் போய் கவிதா களத்துல இறங்கிக் கலக்கிட்டுப் போய்ட்டாங்க.. காயத்ரியும், ரிஷியும் நாம சொல்ல நினைச்சது எல்லாத்தையும் முன்னாடியே வந்து சொல்லிட்டுப் போயிடறாங்க. ஆனால் நல்ல பிள்ளையா பேசினா ஆசிரியரம்மா மண்டையிலேயே கொட்டுறாங்க. உன்னைப் பிரசங்கம் பண்ணச் சொல்லலை, அரட்டை அடிக்கச் சொன்னேன்னு.. எல்லாப் பக்கமும் அடிச்சா நான் என்னங்க பண்ணுவேன். இதை விட பாவம் சொர்ணாக்கா தான். அவங்களை நான் விளையாட்டுக்கு சொர்ணாக்கான்னு சொல்லப் போய், எல்லாரும் அவங்கள ரவுடி ஆக்கிட்டாங்க.. மன்னிச்சுக்குங்க சொர்ணாக்கா.. இல்லை இல்லை.. ஸ்வர்ணா, இனி உங்களை உங்க பேர் சொல்லியே கூப்பிடறேன். எவ்ளோ நல்ல பேர்.. இதைப் போய்.. (ஸ்வர்ணாவுக்குக் கொஞ்சமாச்சும் உச்சி குளிர்ந்திரும்ல?)

அவங்களுக்கு உச்சி குளிருதோ இல்லையோ, இங்க மண்டை காயுது நண்பர்களால.. என் நண்பர்கள் சில பேருக்கு மொக்கை மன்னர்கள்னு பேர் வைக்கலாங்க.. இப்போல்லாம் சாதாரணமா பேசறது போய், வார்த்தைக்கு வார்த்தை கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. பொறுமையோட எல்லையைத் தாண்டி இனிமே மொக்கை போட்டா கட்டணம் வசூலிக்கப்படும்னு எங்க நண்பர்கள் குழுமத்தில் அறிவிக்கப்பட்ட சட்டம் கொண்டு வந்துட்டோம்.. அதனால இப்போ அடுத்த நிலைக்குத் தாவிருக்காங்க.. அது என்னன்னா – பாடலில் பிழை கண்டுபிடிப்பது.. அதுக்காகவே இந்தக் குறுந்தகடு வாங்கி வச்சிருக்காங்க:

http://www.nilashop.com/product_info.php?products_id=756

அப்படி அவங்க பிழை கண்டுபிடிச்ச ஒரு பாட்டை அவங்க அனுமதியோட இங்க போடுறேன்.. (நன்றி திரு. மொஹைதீன், திரு. ரவி அவர்களே.. நீங்க கேட்டுக் கொண்டபடியே உங்க பேரைப் போட்டாச்சு.. விளைவுகளை சந்திக்கத் தயாரா இருந்துக்குங்க)

வேலைக்காரன் படத்தில அந்தாக்க்ஷரி மாதிரி ஒரு பாட்டு வரும்.. அதுல அமலா பாடி முடிக்கும் போது ‘தோட்டம்’னு முடிப்பாங்க.. அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் ‘தோட்டத்தில பாத்தி கட்டி..’ பாடுவார்.. இதுல தாங்க குற்றமே.. என்ன குற்றம்னா… ஐ.. இப்ப சொல்ல மாட்டேனே.. அரட்டையோட முடிவில் சொல்றேன்..

சத்யமும், அமெரிக்காவும் சேர்ந்து நிறைய பேர் வாழ்க்கையில் விளையாண்டாச்சு.. ரொம்ப அடி வாங்குனது கணிப்பொறியியல் வல்லுனர்கள்தாங்க.. எத்தனை லட்சம் பேருக்கு வேலை ஏற்படுத்திக் கொடுத்த துறை! இன்னைக்கு எத்தனையாயிரம் பேர் வேலையிழந்துட்டாங்க… அவங்க குடும்பங்களை எல்லாம் நினைச்சா ரொம்பக் கவலையாயிருக்கு.. எல்லாரும் கண் போட்டதாலதானோ என்னவோ இப்படியாயிடுச்சு.. எல்லாருக்கும் அவங்க வாங்கற சம்பளம்தாங்க தெரியுது.. ஆனால் அதுக்காக அவங்க உழைக்கற உழைப்பு எவ்வளவு தெரியுமா? ராத்திரி – பகல், சனி – ஞாயிறு எதுவும் கிடையாது. இதுக்கு மேல மேலதிகாரிங்க குட்டுறது வேற.. இத்தனையும் தாங்கி வேலை பார்த்தும், வேலை நிரந்தரம் இல்லைங்கும் போது அவங்க நிலைமை எவ்வளவு வேதனை? அவங்களப் பார்த்துப் பொறாமைப்பட்டு திட்டுறவங்களுக்கெல்லாம் ஒரே ஒரு கேள்வி.. "உங்க பையனுக்கோ பொண்ணுக்கோ இந்தத் துறையில் கை நிறைய சம்பளத்தோட வேலை கிடைச்சா போக வேண்டாம்னு சொல்வீங்களா?"

அரட்டை நண்பர்களே, அப்படிக் குறை சொல்றவங்களைப் பார்த்தா என் சார்பா இந்தக் கேள்வியைக் கேளுங்க, சரியா?

அதே மாதிரி, கணிப்பொறித் துறையில் இருக்கற நண்பர்களுக்கும் ஒன்னு சொல்லிக்க விரும்பறேன். நிரந்தரம் இல்லாத வேலை. அதனால முடிஞ்ச மட்டும் பணத்தை உபயோகமா செலவழிங்க, சேர்த்து வைங்க.. அதிகப் பணம் சும்மா வரலை. உங்க உழைப்புல வருது.. அதை ஆடம்பரச் செலவுகளில் வீணாக்காதீங்க..

அய்யய்ய… ஒரேயடியா சோக கீதம் இசைச்சுட்டுருக்கேனோ? அப்போ கொஞ்சம் சிரிக்கவும் வைக்கணும் இல்லையா? விஜய் நடிச்ச வில்லு படம் பார்த்தீங்களா? கேள்விக்கே சிரிப்பு வருதோ? குருவி படத்தையே ஜீரணிக்க முடியலை.. அதுக்குள்ள இப்படி ஒரு படம்.. கொடுமை.. (விஜய் ரசிகர்கள் மன்னித்துக் கொள்ளவும்). விஜய் அடுத்து எந்த மாதிரிப் படம் நடிக்கப் போறாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கறவங்க, கட்டாயம் இந்த முகவரியை சொடுக்குங்க.. கடைசியில் உங்களோட சேர்ந்து யாரெல்லாம் சிரிக்கிறாங்கன்னு பாருங்க..

http://www.youtube.com/watch?v=S9thQW8orHo&feature=related

அடுத்த தகவல் உங்களுக்கு உபயோகமா இருந்துச்சுன்னா, கண்டிப்பா எனக்கு ஒரு பின்னூட்டம் தரணும், சரியா?

நம்ம ரயில்வே துறை அபாரமா செயல்பட்டுட்டிருக்கு.. மூனு மாசம் முன்னாடியே ஒரு பயணச்சீட்டு பதிவு செய்ய வசதி இருந்தும் சீட்டு தாங்க கிடைக்க மாட்டேங்குது. காலங்காத்தால தூக்கத்தைக் கெடுத்துட்டு 8.15 மணிக்கு irctc.co.in ல் நுழைஞ்சு பார்த்தா, 3 மாசம் அப்புறமா உள்ள வண்டிக்கு அப்பவே காத்திருப்புப் பட்டியல் காட்டுது. அவ்வளவுக்கு மக்கள் ரயில் பயணம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.. நாம போக வேண்டிய தேதியில, போக வேண்டிய ஊருக்கு, எந்தெந்த வண்டியிருக்கு, ஒவ்வொரு வண்டியிலயும் மிச்சம் எத்தனை இருக்கை இருக்குன்னு உடனடியா பார்க்கணும்னா, இனிமே நீங்க irctc.co.in க்கோ southernrailway க்கோ போக வேண்டாம். இந்தத் தளத்தில் தெரிஞ்சுக்கலாம்: http://www.cleartrip.com/trains/calendar

இணைய உலா போனப்போ, ஒரு தளம் கிடைச்சுச்சு. டச் நாட்டைச் சேர்ந்த ‘ஹேமா’ பலசரக்குக் கடை. அவங்க இணைய தளம் எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒன்னு.. பொருட்களுக்காக இல்லை, அதில் உள்ள GRAPHICS(வரைபடயியல்) திறமைக்காக.

http://producten.hema.nl/

நல்லா இருந்துச்சுல்ல.. வாழ்த்துக்கள் திறமையாளரே..

இப்போல்லாம் நிறைய பேருக்கு மாரடைப்பு வருது. மன அழுத்தம் தான் அதிகக் காரணமா இருக்கு. நல்ல இசையைக் கேட்டா மன இறுக்கம் தானாக் குறையும். இந்தக் குறுந்தகடு இதுக்கு உதவியாயிருக்கும்:

 http://www.nilashop.com/product_info.php?products_id=489

சரி இப்ப நம்ம பாட்டுக்கு வருவோம்.. யோசிச்சு என்ன குற்றம்னு யாராவது கண்டு பிடிச்சீங்களா? (ஹி.. ஹி.. என்னால கண்டுபிடிக்க முடியலைங்கறது வேற விஷயம்). என்ன குற்றம்னா

‘ரஜினி நியாயப்படி தோட்டம்னு பாடலை ஆரம்பிக்காம ‘தந்நந்நா.. தந்நந்நந்நா..’ னு ஆரம்பிப்பாராம்.. அதனால் அவர் விளையாட்டோட விதிமுறையை மீறிட்டாராம்.’

ஐய்யய்யோ.. என்னை அடிக்க வராதீங்க.. எதாருந்தாலும் ரவிக்கும், மொஹைதீனுக்கும் தான் போய்ச் சேரும்.. நான் கிளம்புறேன்..

அன்புடன் விடைபெறுவது,
ஜோ”

About The Author

2 Comments

  1. ambujamadhavan

    துக்கம் கன்கலை தழுவட்டும் ரொம்ப நன்னா இருந்தது.

  2. Rishi

    ஜோ,
    கிளியர்டிரிப் பற்றி உபயோகமான தகவல். ரொம்ப நன்றி. படு வேகமா செக் பண்ண முடியுது. வாழ்க அஜாக்ஸ் தொழில்நுட்பம்!
    இப்போதான் 4 டிக்கெட் போட்டேன்.

Comments are closed.