உணவே மருந்து

ஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க "ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது. இந்தப் பழமொழியின் முதல் பாதியான ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம்.

அள்ளி உண்ண நேரமில்லாத இந்த அவசர உலகத்தில் அதீத உடல் எடை, அதிக கலோரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவின் மூலமே அதிக உடல் எடையைக் குறைக்க முடியும். கலோரிகளின் கணக்கில் உணவே மருந்தாகும் விந்தை எப்படி எனக் காண்போமே.

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் அதிகப்படியான கலோரிகளை உடலில் சேராமல் செய்ய முடியும். நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தாற் போல் இருக்கும். நம்பிக்கை வரவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.

நம் உடலில் சுரக்கும் குளூக்கான், இன்சுலின் என்ற இரு ஹார்மோன்களே, உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை உடல் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.

கல்லீரலின் சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்வது, இரத்தத்தில் உள்ள சக்கரையை மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகள் பயன்படுத்துவது ஆகியவை உடலில் சுரக்கும் குளூக்கான் ஹார்மோனால் தீர்மானிக்கப்படுகிறது. உடல் செல்களில் உள்ள கொழுப்பை சக்தியாக மாற்றுவதும் குளூக்கான்தான். இன்சுலின் நாம் உண்ணும் உணவின் சத்துகளை செல்களில் சேமிக்கச் செய்கிறது. தேவைக்கு அதிகமான சக்கரை அளவு இருப்பின் இன்சுலின் அதை குறைக்கச் சொல்லி கல்லீரலுக்கு செய்தி அனுப்பும்.

புரோட்டீன் நிறைந்த உணவை உண்கையில் குளூக்கான் சுரக்கப்படுகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்கையில் இன்சுலின் சுரக்கப்படுகிறது. நார்ச்சத்து இருக்கும் உணவை உண்கையில் இரண்டும் சுரக்கப்படுவதில்லை. கார்போஹைட்ரேட் மட்டும் உண்கையில் இன்சுலினுக்கும் குளூக்கானுக்கும் உள்ள விகிதம் அதிகமாகவும், புரோட்டீன் மட்டும் உண்கையில் விகிதம் குறைவாகவும் உள்ளது.

புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார் சத்து ஆகியவை சமமாக உள்ள உணவை உண்பதன் மூலம் குளூக்கான், இன்சுலின் விகிதம் சமமாக இருக்கும்படி செய்து உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம். அனைத்து சத்துகளும் சமமாக உள்ள உணவின் மூலம் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, முறுக்கேறும் சதைப் பகுதிகளைப் பெறலாம்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளுக்கேற்ப நமது உணவுத் திட்டத்தை அமைத்துக் கொண்டால் அழகான உடல் தோற்றத்தைப் பெறலாம்.

1. தேங்காய் எண்ணெய் – பலரும் எண்ணுவது போல் தேங்காய் எண்ணையிலுள்ள கொழுப்புச் சத்து கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுவதில்லை.

2. சாமன் (Salmon) – இந்த வகை மீனிலுள்ள புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், குளூக்கான் மற்றும் இன்சுலின் விகிதத்தை சமமாக வைத்துக் கொள்ள உதவும்.

3. முழுத் தானியத்தால் ஆன பிரட் – முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்.

4. ஆஸ்பரகஸ் (Asparagus) – நார்ச்சத்து மிக்க இந்த உணவை நீங்கள் வெண்ணையுடன் சேர்த்து உண்ணலாம்.

5. முட்டைகோஸ் – சூப்புகளில் பயன்படுத்தப்படும் முட்டைகோஸ் மிகச் சிறந்த கொழுப்பைக் குறைக்கும் பொருள்.

6. கோழிக்கறி – சாலட் போன்றவற்றில் பயன்படுத்தும்போது சரிவிகிதமாகிறது.

7. பூண்டு – முடிந்த அளவிற்கு தினமும் உணவில் பூண்டைப் பயன்படுத்துவது நலம்.

8. பீன்ஸ் – நார்ச்சத்து மிக்க பீன்ஸால் குளூக்கானுக்கும் இன்சுலினுக்கும் உள்ள விகிதம் சரிசெய்யப்படுகிறது.

9. மீன் எண்ணை – வைட்டமின் A மற்றும் D நிறைந்த உணவு.

10. கீரைகள் – தினமும் ஒரு வகைக் கீரையை சாப்பிடுவது உடலுக்கு நலம் சேர்க்கும்.

11. வெண்ணைய் – புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெண்ணையை அளவாக பயன்படுத்தலாம். நாட்பட்ட வெண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம்.

12. முட்டை – புரோட்டீன், கார்போஹைரேட் போன்ற அனைத்துச் சத்துகளும் நிறைந்து.

"உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்" என்ற திருமூலர் வாக்கிற்கேற்ப, சத்தான உணவை சரியான நேரத்தில் உண்டு, அதிக வாழ்நாளையும் அழகான தோற்றத்தையும் பெறுங்கள்.

About The Author

21 Comments

  1. marzook

    Mஇகவும் சிரந்தது தொடர்ந்து எழுத்வும் ,வாழ்துக்கல்

  2. m.rajeswari

    அனைவரும் அழகாக உடல் அமைப்புடன் இருக்க விரும்புவர் அதற்கு இனங்க குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது இது பயனுள்ளதாக இருந்தது. இது போலவே உடல் பருமன் (எடை குறைவாக உள்ளவர்களுக்கு) அதிக எடையை பெறுவது எப்படி? அதற்கான ஒரு சில குறிப்புகளை தயவு செய்து கொடுங்கள்

  3. swamynathan

    ஏனுடைய எடை 97 கிலொக்ரம் இருகு எனகு அccஇடென்ட்ல ரிக்க்ட் லெக் பெலொந் நே அம்புட்டெட் சிதுலர்கல் அதனல் எனகு நெஇக்க்ட் குரைய டிப்ச் கொடுஙல்

  4. G. Balasubramani

    ஊசெfஉல் இன்fஒர்மடிஒன், Kஏப் இட் உப்!!

  5. R.V.Raji

    Hi Kavitha…
    Thanks for your useful (Super super) tips.
    «¦¾øÄ¡õ ºÃ¢… ¿£í¸ ±ô§À¡ ¼¡ì¼÷ ¬É£í¸?

  6. rajavadivel

    திச் சிடெ இச் வெர்ய்னிcஎ அன்ட் உசெfஉல்.

  7. Kalavathy Rajesh

    னிங்கா கொடுத்த தகவல் உதவியக இருந்தது. நன்ரி எனக்கு உடல் குன்டக ஆக்குவதர்க்கு தகவல் வென்டும். மிகவும் ஒல்லியன உடல் உல்லவல் நான். அன்புடன் கலா. நன்ரி.

  8. RAJAPANDI

    வெர்ய் கோட் . உசெfஉல்ல் மசகெச்ச். தன்க்ச்

Comments are closed.