ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வரன் எப்படி இருப்பார்? தயவு செய்து பதில் சொல்லுங்கள். – ஷகீலா, நாகர்கோயில்.

அன்பு நிலாச்சாரல் வாசகி ஷகிலா அவர்களே !

32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரட்டாதி, ராசி மீனம், லக்னம் சிம்மம். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது கேது திசை சனி புத்தி 20.10.2010 வரை நடைபெறும். இந்தக் கால கட்டத்திற்குள் திருமணம் கை கூடி விடும். வருகின்ற வரன் படித்தவராயும், நல்ல குணமுள்ளவராகவும் இருப்பார். தங்களின் ஜாதகத்தில் 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் பாம்புப் புற்றை வழிபடவும். நல்ல மண வாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******

நான் மிதுன ராசி. என்னுடைய ராசிக்கு எந்தக் கல் அணிய வேண்டும். – எஸ்.கார்த்தி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கார்த்தி அவர்களே !

மிதுன ராசியைச் சேர்ந்த தாங்கள், தங்கள் ராசிநாதனான புதனுக்கு உரிய பச்சை நிறக்கல்லை அணியலாம்.

********


அயல்நாடு செல்வதற்கு இது நல்ல காலமா? எவ்வளவு காலம் நன்றாக இருக்கும்? பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? லாபம் எந்த அளவு இருக்கும். டி.சின்னசாமி, கொமரப்பாளையம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சின்னசாமி அவர்களே !

36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் மீனம். தங்களின் ஜாதகப்படி வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. தற்பொழுது ராசியிலிருந்து குரு நல்ல இடத்திலும், மே 2010க்குப் பிறகு லக்னத்திற்கும் குரு வருகிறார். இந்த ஆண்டு இறுதி வரை கிரகங்கள் சாதகமாக உள்ளன. பங்குச் சந்தையில் அளவாக முதலீடு செய்யுங்கள். லாபகரமாக இருக்கும். தங்களின் எண்ணங்கள் பூர்த்தியாக நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********* 

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. V.Tamilselvi

    எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வரன் எப்படி இருப்பார்?ரசி Mஏனம்

Comments are closed.