2010 என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? சினிமாவில் நடிக்கலாமா? – என்.ராஜா, திருவிடைமருதூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகர் ராஜா அவர்களே !
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி சிம்மம், லக்னம் கன்னி. லக்னத்தில் இருந்து 4-ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். மேலும், செவ்வாய் சுக்ரனின் பார்வையைப் பெறுவதால் நடிப்பை விட, கலைத்துறையைச் சார்ந்த பணியில் தங்களின் திறமை பரிமளிப்பதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன. தங்கள் எண்ணம் கை கூட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வியாபாரம் ஆரம்பிக்கலாமா? – டி.கேத்தீஸ்வரன், வஹரை, ஸ்ரீலங்கா.
அன்பு நிலாச்சாரல் வாசகர் கேத்தீஸ்வரன் அவர்களே !
41 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் மேஷம். தங்களின் ஜாதகப்படி தற்போது சுக்ர திசை, சுக்ர புக்தி 22-07-2010 வரை நடைபெறுகிறது. இதற்குள் வேண்டிய பணிகளை செய்து வைத்துக் கொண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சொந்த வியாபாரம் ஆரம்பிக்கலாம். தங்களின் வியாபாரம் சிறக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
நான் ஒருவரை 6 வருடங்களாக காதலிக்கிறேன். அவரது ராசி கடகம், நட்சத்திரம் ஆயில்யம். எங்களது திருமணம் நடக்குமா? – ஜெயந்தி, கோயம்புத்தூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகி ஜெயந்தி அவர்களே !
29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி கும்பம், லக்னம் கடகம். தங்களின் ஜாதகப்படி, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் வாழ்வில் முன்னேற்றத்தையும் வளத்தையும் கொண்டு வரும் . தங்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“
மிகவும் பிடிதுவுல்லது இன்த எமைல் முரை