ஞாயிறு முதல் சனி வரை (2)

திங்கள்

"எனக்கு இன்னைக்கு வேலை காலி" புலம்பிக் கொண்டிருந்தான் பழனிச்சாமி. ‘தினமடல்’ பத்திரிகையில், பத்திரிகையை லாரியில் ஏற்றி அனுப்பும் வேலை பார்க்கிறான்.

வழக்கமாக, வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வார இதழ்களையும் பத்திரிகையுடன் சேர்த்து அனுப்ப வேண்டியிருக்கும். இன்று திங்கட்கிழமை என்பதால் பத்திரிகைகளை மட்டும் அனுப்பிவிட்டான். பின்னர்தான் தெரிந்தது, அன்று ‘மருத்துவ மலர்’ என்ற இதழ் இணைப்பாக உள்ளது என்று!

ஒரு பையன் வந்து ‘எடிட்டர் கூப்பிடுறார்’ எனவும், பதற்றத்துடன் பழனி அறைக்குள் சென்றான்.

உள்ளே எடிட்டர், "மருத்துவ மலரை அனுப்பினியா?" என்று கேட்கவும், "அது வந்து.. இல்லை சார்!" என்றான்.

எடிட்டர் திட்டுவார் என்று எதிர்பார்த்தவனுக்கு அவர் பாராட்டியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

பின்னர்தான் தெரிந்தது. அன்று பத்திரிகைக்காக மருத்துவ மலர் எழுதியிருந்த டாக்டரை ‘போலி டாக்டர்’ என்று போலீசார் கைது செய்து விட்டனராம். இதழ் வெளிவந்திருந்தால், பத்திரிகையின் மானம் கப்பலேறியிருக்கும்.

பழனிச்சாமிக்கு பாராட்டு மழை பொழிந்து – கூடவே, பதவி உயர்வும்…!

About The Author